Home சைவம் தித்திக்கும் சுவையில் கருப்பட்டி பொங்கல் இப்படி செய்து பாருங்க! வீட்டில் உள்ள அனைவரும் விருப்பி சாப்பிடுவார்கள்!

தித்திக்கும் சுவையில் கருப்பட்டி பொங்கல் இப்படி செய்து பாருங்க! வீட்டில் உள்ள அனைவரும் விருப்பி சாப்பிடுவார்கள்!

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதிகமாக கடைகளில் இருந்து வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கோவில்களில் கிடைக்கக்கூடிய இனிப்புகள் பிரசாதம் என்றால் கூட்டமாக இருந்தாலும் அந்த கூட்டத்திலும் சென்று வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு சிலருக்கு இனிப்புகள் மேல் அவ்வளவு காதல் இருக்கும். என்னதான் கோவில்களில் நிறைய பிரசாதங்கள் கொடுத்தாலும் பொங்கல் பிரசாதம் மிகவும் ஸ்பெஷல் ஆனது.

-விளம்பரம்-

அவ்வளவு ருசியாக இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் நம்மால் சாப்பிட முடியும் அந்த அளவிற்கு அதனுடைய ருசியை வர்ணித்து கொண்டே இருக்கலாம். வீட்டில் விசேஷங்கள் என்று சாமிக்கு படைக்க இந்த பொங்கல் பிரசாதத்தையும் செய்வார்கள். அது மட்டும் இல்லாமல் பொங்கல் பண்டிகை என்று பொங்கல் சாப்பிடுவதற்காகவே அந்த பொங்கல் பானைக்கு அருகில் அமர்ந்திருப்பவர்கள் நிறைய பேர். அந்த அளவிற்கு இந்த பொங்கலின் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்.

அதிலும் நாம் இன்று கருப்பட்டி வைத்து கருப்பட்டி பொங்கல் செய்யப் போகிறோம். பொதுவாக கருப்பட்டியில் எண்ணற்ற நன்மைகள் உண்டு என்பார்கள். கருப்பட்டியை நாம் சாப்பிட்டு வந்தால் பசி எடுக்காதவர்களுக்கு நன்றாக பசியை தூண்டும், உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை சுத்தம் செய்து ரத்தத்தையும் சுத்திகரிக்கும், அதுமட்டுமில்லாமல் முகங்கள் பளபளப்பாகும்.

இப்படி என்ன சொன்ன நன்மைகள் உள்ள இந்த கருப்பட்டியில் பொங்கல் செய்து கொடுத்தால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை விரும்பியும் சாப்பிடுவார்கள் அதே நேரத்தில் ஆரோக்கியமானதும் கூட. இந்த அருமையான கருப்பட்டி பொங்கல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்

Print
No ratings yet

கருப்பட்டி பொங்கல் | Karuppati Pongal Reipe In Tamil

கோவில்களில்நிறைய பிரசாதங்கள் கொடுத்தாலும் பொங்கல் பிரசாதம் மிகவும் ஸ்பெஷல் ஆனது. அவ்வளவு ருசியாக இருக்கும்.எவ்வளவு வேண்டுமானாலும் நம்மால் சாப்பிட முடியும் அந்த அளவிற்கு அதனுடைய ருசியை வர்ணித்துகொண்டே இருக்கலாம். வீட்டில் விசேஷங்கள் என்று சாமிக்கு படைக்க இந்த பொங்கல் பிரசாதத்தையும்செய்வார்கள். அது மட்டும் இல்லாமல் பொங்கல் பண்டிகை என்று பொங்கல் சாப்பிடுவதற்காகவேஅந்த பொங்கல் பானைக்கு அருகில் அமர்ந்திருப்பவர்கள் நிறைய பேர். அந்த அளவிற்கு இந்தபொங்கலின் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Karupatti Pongal
Yield: 4
Calories: 217kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 1/2 கப் பச்சரிசி
  • 3/4 கப் கருப்பட்டி
  • 3/4 தேங்காய் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 10 முந்திரி
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய்தூள்
  • 10 கருப்பு திராட்சை
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு குக்கரில் அரிசியை சுத்தம் செய்து போட்டு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். பச்சரிசி அதிகம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு தகுந்த மாதிரி நாம் விசில் விட்டு எடுத்துக் கொள்ளலாம்.
  • பிறகு ஒரு கனமான பாத்திரத்தில் தேங்காய் பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது அந்த கருப்பட்டி கரைசலை வடிகட்டி மறுபடியும் கொதிக்க வைக்க வேண்டும்.
  • பச்சரிசி சாதம் தயார் ஆனவுடன் அதனை இந்த கருப்பட்டி தேங்காய் பால்கரிசலில் போட்டு கிளற வேண்டும்.அதனுடன் சிறிதளவு ஏலக்காய் பொடியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி மற்றும் கருப்பு திராட்சையை போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து விட வேண்டும். இப்பொழுது அருமையான இனிப்பான ருசியான ஆரோக்கியமான கருப்பட்டி பொங்கல் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 217kcal | Carbohydrates: 56g | Protein: 18g | Sodium: 5mg | Potassium: 382mg | Fiber: 9g | Sugar: 2g