- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால் அந்த அளவுக்கு அதை பக்குவமாக செய்யமாட்டார்கள். ஆனால், இப்பதிவில் ஹோட்டல் சுவையில் பட்டாணி முட்டைக்கோஸ் சாதம் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். நிறைய பேருக்கு முட்டைகோஸை வைத்து பொரியல் செய்து கொடுத்தால் பிடிக்காது. முட்டைகோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாசம் தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் ஒரு மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைகோஸை வைத்து இந்த கலவை சாதத்தை செய்தால் எந்த வாசமும் வராது. அட்டகாசமான சுவையில் இருக்கும்.
முட்டைக்கோஸ் சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். பாசுமதி அரிசி மற்றும் இத்தாலிய மூலிகைகளின் கலவையானது, இதன் சுவையை உயர்த்துகிறது மற்றும் உணவக பாணியில் ஃப்ரைட் ரைஸ் சுவையை அளிக்கிறது , ஆனால் எந்த சாஸ்களும் இல்லாமல் இந்த மிதமான மசாலா சாதம் அடிமையாக்கும் சுவைகளுடன் குழந்தைகளை கவர்கிறது. முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். இன்று பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தேங்காய் பால் சாதம் ருசியா இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் பச்சை பட்டாணியை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அவை வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு கண்ணாடி பதம் வந்ததும் நீளமாக வெட்டிய முட்டைகோஸ், வேக வைத்த பட்டாணி சேர்த்து கிளறவும்.
பின் உப்பு மற்றும் சீரக தூள் சேர்த்து கிளறி, 5-7நிமிடங்களுக்கு எண்ணையிலேயே முட்டைகோஸை நன்றாக வேக வைக்கவும்.
முட்டைக்கோஸ் நன்றாக வெந்ததும், மிளகு தூள், மிளகாய்த்தூள் மற்றும் வேக வைத்து சாதம் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
இறுதியாக இதன் மேல் சிறிது கொத்தமல்லி தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான, காரமான பட்டாணி முட்டைகோஸ் சாதம் ரெடி.






