- Prep
- 10 min
- Cook
- 25 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
ருசியான தேங்காய் பால் சாதம் ஒரு முறை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க அவர்களும் மீண்டும் எப்போ செய்விக்கனு கேப்பாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
பிரியாணி சுவையில் இருக்கும் இந்த தேங்காய் சாதத்துடன், தயிர் பச்சடி, அல்லது சிக்கன் கிரேவி போன்று செய்து சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
விடுமுறை நாட்களில் மட்டும் தான் அசைவம் செய்து சாப்பிடுகிறோம். அந்த வகையில் வார நாட்களில் ஒரு நாள் இந்த தேங்காய் சாதம் செய்து சாப்பிடுங்கள்.
இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இதையும் படியுங்கள் :வீடே மணக்க மணக்க ருசியான காளான் தேங்காய் பால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! இட்லி, தோசை சாதத்து கூட சாப்பிட பக்காவாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் அரிசியை நன்கு கழுவி குறைந்தது 25 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுத்து ஒரு மிக்சியில் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், மல்லி விதை, முந்திரி, நச்சத்திர சோம்பு, கசகசா, சேர்த்து நைசாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பெரிய பாத்திரம் அடுப்பில் வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் முந்தி பருப்புகளை போட்டு வறுத்து தனியாக எண்ணெய் வடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு அதே எண்ணெயில் பட்டை, பிரிஞ்சி இலை, நச்சத்திர சோம்பு, கருப்பு ஏலக்காய், சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும்.
சிவந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வேகும் அளவிற்கு வதக்கினால் போதும். பிறகு பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து கொழைய வாதக்காமல் வேகும் அளவிற்கு வதக்கினால் போதும்.
தக்காளி வெந்ததும் அரைத்த பொடியை சேர்த்து வறுத்த முந்திரி பருப்புகளை சேர்த்து கலந்து 2 கப் தேங்காய் பால் 2 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தல தளவென கொதித்ததும் ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்துக்கொள்ளவும். 5 நிமிடம் ஒரு கொத்தி வந்ததும்குறைவான தீயில் மூடி போட்டு தம் போட்டு 20 நிமிடம் விடவும்.
20 நிமிடம் கழித்து திறந்து கிளறி விட்டு பரிமாறவும்.
இப்பொழுது ருசியான தேங்காய் பால் சாதம் தயார்.






