வீடே மணக்க மணக்க ருசியான காளான் தேங்காய் பால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! இட்லி, தோசை சாதத்து கூட சாப்பிட பக்காவாக இருக்கும்!

- Advertisement -

நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் இரும்பு மற்றும் செம்பு சத்துக்களையும் அதிகம் கொண்டது. காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள், காளான் உடலுக்கும் நல்ல மருத்துவ பயனளிக்கிறது, குழந்தைகள் விரும்பும் விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது.

-விளம்பரம்-

அதேபோல் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் அசைவ உணவுகளுக்கு நிகராகவும் இருக்கும். காளான் வைத்து சுவையான மசாலா, கிரேவி, 65, மஞ்சூரியன் என்று பல விதங்களில் சேமித்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் காளான் வைத்து தேங்காய் பால் கிரேவி ரெசிபியை காண உள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த காளான் தேங்காய் பால் கிரேவி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் சப்பாத்தி மட்டும் இல்லாமல் சாதத்துக்கு மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -
Print
No ratings yet

காளான் தேங்காய் பால் கிரேவி | Mushroom Coconut Milk Gravy Recipe In Tamil

நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் இரும்பு மற்றும் செம்பு சத்துக்களையும் அதிகம் கொண்டது. காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. காளான் வைத்து சுவையான மசாலா, கிரேவி, 65, மஞ்சூரியன் என்று பல விதங்களில் சேமித்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் காளான் வைத்து தேங்காய் பால் கிரேவி ரெசிபியை காண உள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த காளான் தேங்காய் பால் கிரேவி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Mushroom Coconut Milk Gravy
Yield: 4 People
Calories: 51kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 பாக்கெட் காளான்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் காளானை நன்கு கழுவி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • இது கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கலந்து விடவும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • அதன்பிறகு இறுதியாக கரம் மசாலா‌ தூள், மல்லி இலை, கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான காளான் தேங்காய் பால் கிரேவி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 51kcal | Carbohydrates: 2.3g | Protein: 24.3g | Fat: 2g | Sodium: 9mg | Potassium: 448mg | Fiber: 2.7g | Vitamin C: 59mg | Calcium: 18mg

இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ருசியான காளான் புலாவ் ஒரு தரம் இப்மடி செஞ்சி பாருங்க! ஒரு பருக்கை சோறு கூட மிஞ்சாது!