கஷ்டங்கள் விலகி நன்மைகள் உண்டாக வழிபாடு!!

சிவபெருமானை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தீர்ந்துவிடும். குறிப்பாக சிவபெருமானுக்கு உரிய நாளான பிரதோஷ நாளன்று வழிபாடு செய்யும் போது நிச்சயமாக நம்முடைய பிரச்சனைகளும் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களும் நீங்கும். அப்படிப்பட்ட பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் சிவப

By ·

சிவபெருமானை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தீர்ந்துவிடும். குறிப்பாக சிவபெருமானுக்கு உரிய நாளான பிரதோஷ நாளன்று வழிபாடு செய்யும் போது நிச்சயமாக நம்முடைய பிரச்சனைகளும் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களும் நீங்கும். அப்படிப்பட்ட பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானின் திருநாமங்களை கூறி வழிபட வேண்டும் அதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவுகள் பார்க்கலாம்.

சிவபெருமான் வழிபாடு

சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளது அப்படிப்பட்ட வழிமுறைகளில் ஒன்றாக திகழ்வதுதான் மந்திர வழிபாடு. சிவபெருமானுக்கு உரிய மந்திரங்கள் நிறைய உள்ளது அதில் நாம் எந்த மந்திரத்தை உச்சரிக்கின்றோமோ அதற்கு தகுந்தார் போல் நம்முடைய பிரச்சனைகள் தீரும். சிவபெருமானின் திருநாமங்களை மந்திரமாக உச்சரிக்கும் பொழுது சிவபெருமானை நம்முடைய வீட்டிற்கு வந்து விடுவார் என்று கூறப்படுகிறது அப்படிப்பட்ட திருநாம வழிபாட்டை பற்றி பார்க்கலாம்.

சிவபெருமானின் திருநாமம்

சிவபெருமானுக்கு பலவிதமான திருநாமங்கள் உள்ளது அந்த திருநாமங்களில் ஒரு சில திருநாமங்களை தொடர்ச்சியாக கூறும்பொழுது அவருடைய அருளை நாம் பரிபூரணமாக பெற முடியும். அந்த வகையில் பிரதோஷ நாளன்று பிரதோஷ நேரத்தில் இந்த திருநாமங்களை தொடர்ந்து கூறுவதன் மூலம் சிவபெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். சிவபெருமானின் அருள் நமக்கு கிடைத்து விட்டாலே தேவர்களுடைய அருளும் நமக்கு கிடைத்துவிடும்.

சிவபெருமானின் திருநாமங்கள்

“ஓம் பவாய நம
ஓம் ருத்ராய நம
ஓம் ப்ரடாய நம
ஓம் ஈசனாய நம
ஓம் சம்பவே நம
ஓம் சர்வாய நம
ஓம் சானாவே நம
ஓம் உக்ராய நம
ஓம் பக்ராய நம
ஓம் பரமேஸ்வராய நம
ஓம் மகா தேவாய நம”

இந்த திருநாமங்களை வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கூறலாம்‌. இல்லை என்றால் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானின் ஆலயத்தில் அமர்ந்து சிவபெருமானுக்கு ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு நெய்வேத்தியம் வைத்து விட்டு இந்த மந்திரத்தை கூறலாம். நெய்வேதியமாக வைப்பதற்கு எதுவுமே இல்லை என்றால் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து இந்த திருநாம வழிபாட்டை செய்யலாம். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த தண்ணீரை அனைவரும் பகிர்ந்து குடிக்க வேண்டும். சிவபெருமானுக்கு மிருக திருநாமங்கள் இருந்தாலும் பிரதோஷ நேரத்தில் இந்த திருநாமத்தை உச்சரிக்கும் போது நிச்சயமாக நம்முடைய தோஷங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும் முழு நம்பிக்கையோடு இதனை செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : குபேர யோகம் பெறுவதற்கு சிவபெருமானை வழிபட வேண்டிய முறை!

Recipes AMP · Quick view
View full