சிவபெருமானை சரணாகதி அடைந்து விட்டால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் சிவபெருமானை அனைவராலும் சரணாகதி அடைந்து விட முடியாது தூய அன்பினாலும் தூய பக்தியினாலும் மட்டுமே அவரை சரணாகதி அடைய முடியும். சிவபெருமான் நினைத்தால் மட்டுமே ஒரு விஷயத்தை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் ஒருவரை செல்வந்தர் ஆகவும் அவர் மாற்றுவார் ஏழை ஆகவும் அவர் மாற்றுவார்.
சிவன் வழிபாடு
சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வணங்கும்போது பலி பீடத்திற்கு பக்கத்தில் நின்று தான் வணங்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் பணக்காரராக மாற வேண்டும் என்று நினைத்தால் சிவராத்திரி என்று விரதம் இருக்க வேண்டும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்து சிவபெருமானை வழிபட வேண்டும் மேலும் சிவன் கோவிலுக்கு சென்று அமரும் போது கால் நீட்டி அமரக்கூடாது மேலும் சிவபெருமானை வணங்கும் போது இரு கரம் குவித்து தலை மேல் கை வைத்து வணங்குவது சிறந்தது சிவாலயங்களில் உட்காரும்போது தெற்கு மற்றும் மேற்கு திசைகள் நோக்கி மட்டுமே அமர வேண்டும் வழிபட வேண்டும். கிழக்கு நோக்கியோ வடக்கு நோக்கியோ அமரக்கூடாது.
சிவபெருமானை சரணாகதி அடைய செய்ய வேண்டியவை
சிவன் ஆலயத்தில் சன்னதி கிழக்கு நோக்கி இருந்தால் பலி பீடத்திற்கு தென்கிழக்கு மூலையில் நின்று சிவபெருமானை வணங்க வேண்டும். சன்னதி தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் இருந்தால் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும். சன்னதி வடக்கு திசை நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும். மேலும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது பிரதோஷ தினங்களில் சிவன் வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
சிவன் கோவில் கொடிமரம்

சிவன் கோவில்களில் உள்ள கொடி மரத்திற்கு பக்கத்தில் நின்று கொடிமரத்தை மூன்று முறை சுற்றி வந்து விழுந்து வணங்க வேண்டும். மேலும் சிவன் கோவில்களில் அடி பிரதட்சணம் செய்யும் போது பொறுமையாக செய்ய வேண்டும் யாரிடமும் பேசாமல் நிலத்தை பார்த்து பொறுமையாக பூமி அதிராமல் நடக்க வேண்டும் மேலும் உற்ற காலத்தில் பிரதட்சணம் செய்வதை விட வெளிப்பிரகாரத்தில் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். மேலும் சிவன் கோவிலில் அபிஷேகம் நடக்கும் போது அடிப்பிர தட்சணம் ஒருபோதும் செய்யக்கூடாது சிவன் கோவிலுக்குள் சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாது.
சிவன் கோவிலில் ஏற்ற வேண்டிய தீபம்
சிவன் கோவில்களில் அகல் விளக்கு வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வர உடல் நலத்தில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும். தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஒருபோதும் ஏற்றக்கூடாது அது வாழ்க்கையில் பிரச்சனைகளை மட்டுமே கொடுக்கும். உட் பிரகாரத்தில் சிவபெருமானை வழிபடும் போது வலது பக்கம் நின்று வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு உரிய மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் மேலும் சிவபெருமானுக்கு திருநீறு ஊமத்தைப்பூ எருக்கம் பூ அருகம்புல் போன்றவற்றை கொடுப்பதால் குபேர யோகம் கிடைக்கும்.
குழந்தை யோகம்

குழந்தை யோகம் கிடைக்க வியாழக்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தி அஷ்டகம் 9 முறை வாசித்தால் விரைவிலேயே குழந்தை யோகம் கிடைக்கும். சிவபெருமானுக்கு அனைத்து உயிர்களையும் காப்பதற்காக சந்தனம் கஸ்தூரி மஞ்சள் கோரோசனை குங்குமப்பூ பச்சைக் கற்பூரம் போன்றவற்றை கலந்து காப்பு அணிவார்கள் அந்த கோலத்தில் சிவபெருமானை தரிசித்தால் கோடி புண்ணியம் என்று கூறப்படுகிறது. சிவன் கோவிலில் உள்ள சொத்துக்களுக்காக யாராவது ஆசைப்பட்டால் அவர்களுடைய குலம் மொத்தமாக அழிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
சிவபெருமானின் வில்வ இலை
சிவபெருமானுக்கு முல்லை அத்திப்பூ அரளிப்பூ ஜாதிமலர் நீலோத்பவம் போன்றவைகளால் அர்ச்சனை செய்தால் சகல வளங்களும் கிடைக்கும். வில்வத்தால் அர்ச்சனை செய்யும் போது அந்த இலையில் உள்ள பின்பக்க நரம்பு சிவபெருமானின் மீது படும் படி அர்ச்சனை செய்ய வேண்டும்.
இதனையும் படியுங்கள் : குபேரர் சிலை வீட்டில் இருப்பதால் ஏற்படக்கூடிய சில விஷயங்கள்




