வீடே கமகமக்கும் கேரளா விரால் மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

ஆட்டுக்கறியை விட மீன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. ஓமேகா 3 என்ற சத்து மீனில் இருப்பதால் இது இதய நோயளிகளுக்கு ரொம்ப நல்லது. அதனால் வாரத்துக்கு இரண்டு தடவையாவது மீன் சேர்க்கவேண்டும். எப்போதுமே விறால் மீன் வாங்குறப்போ முக்கால் கிலோ

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் ; வறுத்து அரைத்த மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! வீடே கமகமக்கும்!

- Advertisement -

அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்கணும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது. நிறைய மீன் வகைகள் இருந்தாலும் விறால் மீனுக்கு தனி மவுசுதான்… அதன் குழம்புக்கும் தனி ருசிதான். அந்த வகையில் சுவையான விறால் மீன் குழம்பை அடிக்கடி செஞ்சு குடுத்து அசத்துங்க.

Print
No ratings yet

கேரளா விரால் மீன் குழம்பு | Kerala Viral Meen Kulambu Recipe in Tamil

ஆட்டுக்கறியை விட மீன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. ஓமேகா 3 என்ற சத்து மீனில் இருப்பதால் இது இதய நோயளிகளுக்கு ரொம்ப நல்லது. அதனால் வாரத்துக்கு இரண்டு தடவையாவது மீன் சேர்க்கவேண்டும். எப்போதுமே விறால் மீன் வாங்குறப்போ முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்கணும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது. நிறைய மீன் வகைகள் இருந்தாலும் விறால் மீனுக்கு தனி மவுசுதான்… அதன் குழம்புக்கும் தனி ருசிதான். அந்த வகையில் சுவையான விறால் மீன் குழம்பை அடிக்கடி செஞ்சு குடுத்து அசத்துங்க.
Prep Time10 minutes
Active Time25 minutes
Total Time35 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: VIRAAL MEEN KULAMBU, விரால் மீன் குழம்பு
Yield: 4 People
Calories: 361kcal

Equipment

 • 1 குழம்பு பாத்திரம்
 • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

 • 3/4 KG விரால் மீன்
 • 1/4 KG சின்ன வெங்காயம் நறுக்கியது
 • 1/4 KG தக்காளி நறுக்கியது
 • 2 கப் தேங்காய் பால்
 • 3 பல் பூண்டு
 • 1 Tsp கடுகு
 • 2 காய்ந்த மிளகாய்
 • 1 கொத்து கருவேப்பிலை
 • 1 Tsp வெந்தயம்
 • 3 பச்சை மிளகாய்
 • 1 குழி கரண்டி தேங்காய்எண்ணெய்
 • கொத்த மல்லி சிறிது

செய்முறை

 • முதலில் நாம் வைத்திருக்கும் விரால் மீனை சுத்தம் செய்து, துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளவும். சுத்தம் செய்ய தெரியாது என்றால் கயைிலேயே சுத்தம் செய்து வாங்கவும்.
 • அதன் பின் குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணைய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
 • பின் தாளிப்பு முடிந்தவுடன் இதனுடன் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காய் பொன்னிறமாக வதங்கி வந்தவுடன்.
 • பின் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழைந்து வந்ததும் அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து மசாலா வாடை போகும் வரை வதக்கவும்.
 • பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் ஆதனுடன் கொத்துமல்லி கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட்டு தேங்காய்ப் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.
 • பின் குழம்பு நன்கு கொதித்து வந்ததும் நாம் வைத்திருக்கும் விரால் மீன் துண்டுகளை சேர்த்து நன்கு கொதிவிடவும். பின் நன்கு வெந்தவுடன் பாத்திரத்தை இறங்குங்கள். அவ்வளவு தான் சுவையான விரால் மீன் குழம்பு தயார்.

Nutrition

Serving: 900G | Calories: 361kcal | Carbohydrates: 2g | Protein: 31g | Saturated Fat: 0.7g | Vitamin C: 2mg