Advertisement
சைவம்

இட்லி தோசைக்கு ஏற்ற பக்காவான KGF காரசட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

கேஜிஎஃப் அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருது நம்ம ராக்கி பாய் தான். இனிமே நம்ம ராக்கி பாய் ஓட ஞாபகம் வரும் போது நமக்கு ஞாபகம் வர வேண்டியது இந்த கோலார் காரச்சட்னி. இந்த கோலார் கார சட்னியை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள இருக்கோம்.இந்த கோலார் கார சட்னிக்கு தோசை, பொடி தோசை, இட்லி, பொடி இட்லி அப்படின்னு எல்லாத்துக்குமே ரொம்பவே சுவையா இருக்கும்.

இந்த சட்னி ரொம்பவே ஈசியா எந்த ஒரு பொருளுமே நறுக்க வேண்டாம் தக்காளி மட்டும்தான் நறுக்கிற மாதிரி இருக்கும் இது எல்லாமே அப்படியே சேர்த்தோமா அரைச்சோமா அப்படினு ரெடி ஆகும். ரொம்பவே டைம் எடுக்கவே எடுக்காது ஜஸ்ட் வதக்கிறோம் தாளிக்கிறோம் சாப்பிடுறோம் அப்படிங்கற மாதிரியான ஒரு சூப்பரான சட்னி தான் இந்த கேஜிஎஃப் கார சட்னி.

Advertisement

இந்த கேஜிஎஃப் கார சட்னியை ரொம்பவே டேஸ்டா இட்லி தோசை எல்லாம் சேர்த்து சாப்பிடும்போது அப்படி ஒரு டேஸ்டா இருக்கும். அதுலயும் முக்கியமா பொடி தோசை கூட இந்த சட்னியை சாப்பிட்டு பார்த்தீங்கனா வேற லெவல்ல இருக்கும். கண்டிப்பா இந்த கேஜிஎஃப் கார சட்னி செய்து உங்க வீட்டுல உள்ள எல்லாரையும் அசத்துங்க. காரச்சட்னி அது கேஜிஎஃப் கார சட்னி தான் அப்படின்னு சொல்ற அளவுக்கு ரொம்ப வே ருசியா இருக்கும். சரி வாங்க இந்த கேஜிஎஃப் கரை சட்னி எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.

கேஜிஎஃப் காரச்சட்னி | KGF Kara chutney in tamil

Print Recipe
கேஜிஎஃப் அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருது நம்ம ராக்கி பாய் தான். இனிமே நம்ம ராக்கி பாய் ஓட ஞாபகம் வரும் போது நமக்கு ஞாபகம் வர வேண்டியது இந்த கோலார் காரச்சட்னி. இந்த கோலார் கார சட்னியை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள இருக்கோம்.இந்த கோலார் கார சட்னிக்கு தோசை, பொடி தோசை, இட்லி, பொடி இட்லி அப்படின்னு எல்லாத்துக்குமே ரொம்பவே சுவையா இருக்கும்.
Course chutney
Cuisine karnataka
Keyword chilli chutney, Karnataka Peanut Chutney
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
5 minutes
Total Time 20 minutes
Servings 6 People
Calories 203
Cost 50

Equipment

  • 1 மிக்ஸி
  • 2 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 10 காய்ந்த மிளகாய்
  • 1 12 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 கப் வேர்க்கடலை
  • 10 பல் பூண்டு                          
  • 1 ஸ்பூன் சீரகம் 
  • 1 தக்காளி                      
  • நெல்லிக்காய் அளவு புளி                               
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             

தாளிக்க

  • 1 ஸ்பூன் கடுகு                            
  • 1 ஸ்பூன் சீரகம் 
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு வேர்க்கடலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதில் தக்காளி , புளி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக குழைய வதக்க வேண்டும்.தக்காளி நன்றாக குழைய வதங்கிய பிறகு அவற்றை எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வதக்கிய பொருள்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சட்னி நன்றாக அரைத்து எடுத்த பிறகு அது ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுத்து ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலந்து இட்லி, தோசைக்கு பரிமாறினால் சுவையான கேஜிஎஃப் காரச் சட்னி தயார்.

Nutrition

Calories: 203kcal | Carbohydrates: 15g | Protein: 25g | Fiber: 8g

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

10 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

21 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago