கேஜிஎஃப் அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருது நம்ம ராக்கி பாய் தான். இனிமே நம்ம ராக்கி பாய் ஓட ஞாபகம் வரும் போது நமக்கு ஞாபகம் வர வேண்டியது இந்த கோலார் காரச்சட்னி. இந்த கோலார் கார சட்னியை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள இருக்கோம்.இந்த கோலார் கார சட்னிக்கு தோசை, பொடி தோசை, இட்லி, பொடி இட்லி அப்படின்னு எல்லாத்துக்குமே ரொம்பவே சுவையா இருக்கும்.
இந்த சட்னி ரொம்பவே ஈசியா எந்த ஒரு பொருளுமே நறுக்க வேண்டாம் தக்காளி மட்டும்தான் நறுக்கிற மாதிரி இருக்கும் இது எல்லாமே அப்படியே சேர்த்தோமா அரைச்சோமா அப்படினு ரெடி ஆகும். ரொம்பவே டைம் எடுக்கவே எடுக்காது ஜஸ்ட் வதக்கிறோம் தாளிக்கிறோம் சாப்பிடுறோம் அப்படிங்கற மாதிரியான ஒரு சூப்பரான சட்னி தான் இந்த கேஜிஎஃப் கார சட்னி.
இந்த கேஜிஎஃப் கார சட்னியை ரொம்பவே டேஸ்டா இட்லி தோசை எல்லாம் சேர்த்து சாப்பிடும்போது அப்படி ஒரு டேஸ்டா இருக்கும். அதுலயும் முக்கியமா பொடி தோசை கூட இந்த சட்னியை சாப்பிட்டு பார்த்தீங்கனா வேற லெவல்ல இருக்கும். கண்டிப்பா இந்த கேஜிஎஃப் கார சட்னி செய்து உங்க வீட்டுல உள்ள எல்லாரையும் அசத்துங்க. காரச்சட்னி அது கேஜிஎஃப் கார சட்னி தான் அப்படின்னு சொல்ற அளவுக்கு ரொம்ப வே ருசியா இருக்கும். சரி வாங்க இந்த கேஜிஎஃப் கரை சட்னி எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.
கேஜிஎஃப் காரச்சட்னி | KGF Kara chutney in tamil
Equipment
- 1 மிக்ஸி
- 2 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 10 காய்ந்த மிளகாய்
- 1 12 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 கப் வேர்க்கடலை
- 10 பல் பூண்டு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 தக்காளி
- நெல்லிக்காய் அளவு புளி
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு வேர்க்கடலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதில் தக்காளி , புளி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக குழைய வதக்க வேண்டும்.தக்காளி நன்றாக குழைய வதங்கிய பிறகு அவற்றை எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
- வதக்கிய பொருள்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- சட்னி நன்றாக அரைத்து எடுத்த பிறகு அது ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
- பிறகு அடுத்து ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலந்து இட்லி, தோசைக்கு பரிமாறினால் சுவையான கேஜிஎஃப் காரச் சட்னி தயார்.