எல்லா வெரைட்டி சாதத்துக்கும் சாப்பிடுற மாதிரி ஒரு சூப்பரான முட்டை தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

வீட்ல நான்வெஜ் எடுக்க முடியல அப்படின்னா நம்ம எல்லோருக்கும் மைண்டுக்கு வருவது முட்டை தான். முட்டையை வைத்து குழம்பு முட்டை வறுவல் முட்டை பிரியாணி அப்படின்னு ஏதாவது செஞ்சு சாப்பிடுவோம். முட்டை தினமும் கூட எல்லாரும் சாப்பிடுவாங்க முட்டை சாப்பிடுவது நல்லது கூட வீட்ல காய்கறிகள் எதுவும் இல்லை அப்படின்னா சாதத்துக்கு தொட்டுக்கிற ஆம்லெட் ஆஃப்பாயில் போட்டு சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

அந்த வகையில வெரைட்டி சாதங்களான தயிர் சாதம் புளி சாதம் லெமன் சாதம், தேங்காய் சாதம் குஸ்கா தக்காளி சாதம் வைத்து சாப்பிடுகிற மாதிரி ஒரு சிம்பிளான முட்டை தொக்கு இப்படி செஞ்சு பாருங்க. இந்த முட்டை தொக்கு செய்வதற்கு ரொம்பவே குறைவான நேரம் தான் தேவைப்படும் குறைவான நேரத்திலயே ஒரு சுவையான முட்டை தொக்கு செஞ்சு சாப்பிடலாம்.

- Advertisement -

குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு டிபன் பாக்ஸ்ல லஞ்சுக்கு கூட இந்த முட்டை தொக்கு வச்சு கொடுக்கலாம் காலையில எழுந்து செய்வதற்கு ஈஸியான ஒரு டிஸ்ஸா இது இருக்கும். அந்த வகையில இப்ப நம்ம இந்த முட்டை தொக்கு ரொம்ப ஈஸியான முறையில் தான் செய்யப் போறோம். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் நம்மை இந்த சிம்பிளான முட்டை தொக்க சீக்கிரமா செஞ்சு கொடுத்திடலாம் அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க இப்ப இந்த சிம்பிளான முட்டை தொக்கு சீக்கிரமா டேஸ்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
3 from 2 votes

முட்டை தொக்கு | Egg Thokku Recipe In Tamil

குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு டிபன் பாக்ஸ்ல லஞ்சுக்கு கூட இந்த முட்டை தொக்கு வச்சு கொடுக்கலாம் காலையில எழுந்து செய்வதற்கு ஈஸியான ஒரு டிஸ்ஸா இது இருக்கும். அந்த வகையில இப்ப நம்ம இந்த முட்டை தொக்கு ரொம்ப ஈஸியான முறையில் தான் செய்யப் போறோம். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் நம்மை இந்த சிம்பிளான முட்டை தொக்க சீக்கிரமா செஞ்சு கொடுத்திடலாம் அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க இப்ப இந்த சிம்பிளான முட்டை தொக்கு சீக்கிரமா டேஸ்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
Prep Time10 minutes
Active Time15 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Egg Thokku
Yield: 3
Calories: 76kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • கருவேப்பிலை சிறிதளவு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • கொத்தமல்லிஇலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  
    ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து உப்பும் சேர்த்து நன்றாக வேக வைத்து இரண்டாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • அதில் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • மிளகாய்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு அனைத்தும் சேர்த்து நன்றாக வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்
  • நன்றாக சுருள வதங்கியதும் முட்டையை சேர்த்து சிறிதளவு மல்லி இலைகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் பிறகு இறக்கினால் சுவையான முட்டை தொக்கு தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 76kcal | Carbohydrates: 4.9g | Protein: 7.32g | Sodium: 880mg | Calcium: 12mg | Iron: 1mg

இதனையும் படியுங்கள் : கமகமனு முட்டை சாப்ஸ் இப்படி கூட செய்யலாம் சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட பக்காவா இருக்கும்!