கர்நாடக கோலார் ஸ்டைலில் கோலார் சட்னி இட்லி தோசைக்கு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

வீட்டில் சமையல் செய்யும் தாய்மார்களுக்கு இருக்கும் குழப்பம் காலை மற்றும் இரவு நேரத்தில் என்ன சட்னி அரைப்பது என்பது தான். இதில் வீட்டில் இருப்பவருக்கு தக்காளி சட்னி பிடிக்கும், தேங்காய் சட்னி பிடிக்காது, இன்னும் சிலருக்கு தேங்காய் சட்னி பிடிக்கும் தக்காளி சட்னி பிடிக்காது. அந்த வக

By Prem Kumar · 19/12/2025

வீட்டில் சமையல் செய்யும் தாய்மார்களுக்கு இருக்கும் குழப்பம் காலை மற்றும் இரவு நேரத்தில் என்ன சட்னி அரைப்பது என்பது தான். இதில் வீட்டில் இருப்பவருக்கு தக்காளி சட்னி பிடிக்கும், தேங்காய் சட்னி பிடிக்காது, இன்னும் சிலருக்கு தேங்காய் சட்னி பிடிக்கும் தக்காளி சட்னி பிடிக்காது. அந்த வகையில் காலையில் இட்லி தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் அதே சமயம் செய்வதற்கு சுலபமாக இருக்கக்கூடிய ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலைக் கொண்டு செய்யக்கூடிய கோலார் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி கர்நாடகாவின் கோலார் பகுதியில் மிகவும் பிரபலமான சட்னி. கர்நாடக மாநிலத்தின் உணவு வகைகள் அவற்றின் தனித்துவமான சுவைக்கு பெயர் பெற்றவை. அவற்றுள் ஒன்றுதான் கோலார் சட்னி. இந்த சட்னி இட்லி, தோசை இடியாப்பம் என பலவகையான உணவுகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.

இந்த சூப்பரான ரெசிபியை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் வீட்டில் உள்ளவர்கள் கூடுதலாக இரண்டு தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதில் சேர்க்கப்படும் பூண்டு, வேர்க்கடலை, தக்காளி, மிளகாய் ஆகிய பொருட்களில் கூட்டு கலவை உங்கள் நாவின் சுவை மொட்டுக்களை நிச்சயம் மலர செய்யும். வாருங்கள் இப்போது சுவையான கர்நாடகா கோலார் ஸ்டைலில் கோலார் சட்னி எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : கர்நாடகா நண்டு மசாலா இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!

Recipes AMP · Quick view
View full