கர்நாடகா நண்டு மசாலா இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!

- Advertisement -

நீங்கள் அசைவ பிரியர்களா உங்களுக்கு நண்டு பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவுதான் இன்று பார்க்க போகிறோம். கர்நாடகா நண்டு மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனால் நம் வீட்டிலும் அதுபோன்று செய்வதில் பலருக்கும் தெரியாது. ஆனால் இனி கவலை வேண்டாம், இனி உங்கள் வீட்டிலேயே ஹோட்டல் சுவை மிஞ்சும் அளவிற்கு ருசியாக எப்படி நண்டு மசாலா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கமகமக்கும் செட்டிநாடு அயிரை மீன் குழம்பு இப்படி செய்து! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. இந்த நண்டு மசாலா செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அல்லது சுட சுட சாதத்துடன் ரசம் மாமற்றும் இந்த நண்டு மசாலா சேர்த்து சாப்பிடலாம். குளிர் காலங்கள், மற்றும் மழை காலங்களில் நண்டு சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த வார கடைசில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

nandu masala
Print
5 from 1 vote

நண்டு மசாலா | Nandu Masala Recipe In Tamil

நீங்கள் அசைவ பிரியர்களா உங்களுக்கு நண்டு பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவுதான் இன்று பார்க்க போகிறோம். ஹோட்டல்களில் நண்டு மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனால் நம் வீட்டிலும் அதுபோன்று செய்வதில் பலருக்கும் தெரியாது. ஆனால் இனி கவலை வேண்டாம், இனி உங்கள் வீட்டிலேயே ஹோட்டல் சுவை மிஞ்சும் அளவிற்கு ருசியாக எப்படி நண்டு மசாலா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time10 minutes
Active Time24 minutes
Total Time34 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: nandu masala, நண்டு மசாலா
Yield: 4 people
Calories: 110kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • ½ கிலோ நண்டு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 தக்காளி நறுக்கியது
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 1 ஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • குழம்பு பொடி தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 ஸ்பூன் பெப்பர்
  • கொத்தமல்லி தலை கொஞ்சம்

செய்முறை

  • முதலில் நண்டை சுத்தம் செய்து நன்கு கழுவி மஞ்சள் தூள் போட்டு கலந்து வைக்கவும்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து கொஞ்சம் கொழைய வதக்கவும் வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பிறகு கருவேப்பிலை சேர்த்து அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை சேர்த்து மகறிமசாலா தூள், மிளகாய் தூள், குழம்பு மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
  • 10 நிமிடம் கழித்து அதன் மேல் பெப்பர் தூவி அத்துடன் நறுக்கிய கொத்தமல்லி தலைகளையும் தூவி இறக்கவும்.
  • இப்பொழுது நண்டு மசாலா தயார்.

செய்முறை குறிப்புகள்

 

Nutrition

Serving: 700G | Calories: 110kcal | Protein: 30g | Saturated Fat: 0.5g | Potassium: 625mg | Sugar: 0.5g