ருசியான இந்த கோவைக்காய் சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார்ன்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்க!!!

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். நம் வீடுகளில் எப்படிய

By Prem Kumar · 3/3/2024

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். நம் வீடுகளில் எப்படியும் வாரத்தில் ஒரு நாள் ஆவது சாம்பார் வைத்துவிடுவார்கள். குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்கள் என்றாலே சாம்பார் தான் மெனு. கல்யாண வீட்டு சாம்பார் என்றாலே அனைவருக்கும் பசிக்க ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு அதன் சுவையும், மணமும் அலாதியானதாக இருக்கும்.

சமைக்கத் தெரியாதவர்கள் கூட ரொம்ப சுலபமாக இந்த கோவக்காய் சாம்பார் இப்படி செஞ்சு பார்த்தால் வீட்டிலிருக்கும் எல்லோரும் பாராட்டி தள்ளிவிடுவார்கள். கல்யாண வீட்டு சாம்பார் போல சுவை தரும் இந்த கோவக்காய் சாம்பார் செய்யவும் ரொம்ப நேரம் எடுக்காது. கோவைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. கோவைக்காய் தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்ற பல நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

சர்க்கரை நோய்க்கான சிறந்த மருந்துதான் கோவக்காய். இதில் உள்ள வைட்டமின்கள் B1, B2, B3, C மற்றும் இரும்பு, சுண்ணாம்பு, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதய துடிப்பினை சீராக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்த கோவக்காயில் சாம்பார் வைக்கும் போது அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ருசியான இந்த கோவைக்காய் சாம்பாரை எப்படி வைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full