Advertisement
ஆன்மிகம்

உங்கள் வீட்டில் பணம் பெருகி கொண்டே இருக்க வேண்டுமா ? அசிங்க படுத்தியவர் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டுமா ?

Advertisement

ஒருவர் அறிவையும் மதிப்பையும் தீர்மானிப்பது கல்விதான் என்று பலரும் நம்மிடம் கூறியிருந்தாலும். நிசத்தனமான உண்மை என்னவென்றால் யார் ஒருவரிடம் காசு பணம் உள்ளதோ அவர்கள் தான் இந்த சமூகத்தில் போற்றப்படுவார்கள். என்னதான் பெரிய பெரிய படிப்புகள் படித்திருந்தாலும், ஆனால் முறையாக கல்வி பயிலாத ஒருவனிடம் பணம் இருந்தால் அவனை தான் இந்த சமூகம் தூக்கி வைத்து கொண்டாடும். இதற்கெல்லாம் காரணம் அவர்களின் முன்னோர்கள் செய்து வந்த புண்ணியமாக இருக்கும். இருந்தாலும் பணம் இல்லாமல் தினந்தோறும் வாழ்க்கையுடன் போராடி பெரும் மன வருத்தத்துடன் உள்ளவர்களுக்கு பணம் காசு வந்து சேர்ந்து செல்வந்தர்களாக மாறுவதற்காக குபேரனை பூஜை செய்து இந்த ஹோமம் செய்தால் நீங்களும் செல்வந்தர் ஆகலாம். அதனால் இந்த குபேர பூஜை பற்றி நாம் இந்த ஆன்மீக தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

லட்சுமி குபேர ஹோமம்

ஆம், சக்தி வாய்ந்த இந்த பூஜையின் பெயர் “லட்சுமி குபேர ஹோமம்” இந்த ஹோமத்தை செய்பவர்கள். முதலில் ஒரு புரோகிதரை அணுகுங்கள். புரோகிதர் இந்த ஹோமத்தை செய்பவரின் ஜென்ம நட்சத்திரத்தை பார்த்து அவருக்கு உண்டான யோகம் மற்றும் திதி என்று கைகூடி வருகிறதா அந்த நாள் பார்த்து தேதி குறித்து தருவார். அந்த நாட்களில் இந்த லட்சுமி குபேர ஹோம பூஜை செய்ய வேண்டும் மேலும் இந்த பூஜையை வெள்ளிக்கிழமைகளிலும் அட்சய திருதி நாட்களில் செய்வது இன்னும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

Advertisement

பூஜை

இந்த லட்சுமி குபேர பூஜை செய்யும் நபரின் குடும்பத்தினர்களும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு யாகம் செய்யும் இடத்திற்கு வந்து அமர்ந்து

Advertisement
கொள்ள வேண்டும். இந்த லட்சுமி குபேர ஹோம பூஜை செய்வதற்கு முதலில் 16 நெய் தீபங்களை ஏற்றி மகாலட்சுமியை வில்வ இலைகளை வைத்து, குபேர பகவானை நம் வீட்டில் வைத்திருக்கும் தங்க காசுகள், வெள்ளி காசுகள் போன்றவற்றை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த பூஜை செய்யப்படும்
Advertisement
குபேர பகவானுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும். பின்பு இந்த லட்சுமி குபேர ஹோம பூஜை நல்ல படியாக முடிந்தவுடன் நெய் வைத்தியமாக படைக்கப்பட்ட சர்க்கரை பொங்கலை பிரசாதமாக கொடுத்துக் கொள்ளுங்கள்.

செல்வந்தர் ஆகலாம்

எப்படி இந்த பூஜையை நன்கு அனுபவம் வாய்ந்த புரோகிதர்கள் மூலமாக நாமும் முழு நம்பிக்கையுடனும் இந்த பூஜையை செய்து முடித்தால். இந்த சமூகத்தில் நம்மளை ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு போகும், கடனில் மூழ்கிக் கிடந்த நபர்கள் அதை விட்டு வெளியே வருவார்கள், சுமக்க முடியாத கடனை நீங்கள் வைத்திருந்தாலும் எப்படியாவது கஷ்டப்பட்டு இந்த பூஜையை செய்து முடிந்தால் உங்களுக்கு தேவையான பணம் கிடைத்து நீங்கள் செல்வந்தர் ஆகலாம். இந்த சமுதாயத்தில் உங்கள் நிலை எந்த அளவிற்கு உயரும் என்றால், இத்தனை நாட்கள் உங்களிடம் பேசாமல், நீங்கள் பேச வந்தாலும் உங்களை அவமானப்படுத்தி சென்றவர்கள் முன்பாக வாழ்ந்து காட்டும் அளவிற்கு உங்களை இந்த சமுதாயத்தில் கௌரவம் வாய்ந்த இடத்திற்கு கூட்டிச் செல்லும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

3 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

3 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

3 மணி நேரங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

4 மணி நேரங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

6 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

7 மணி நேரங்கள் ago