குடிசையில் இருப்பவனை கூட கோபுரத்துக்கு எடுத்து செல்லும் குபேரர்! குபேரர் பக்கத்தில் இந்த தெய்வத்தை மட்டும் வையுங்கள் போதும்!

நம் வீட்டில் பண மழை பெய்ய வேண்டும், செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இங்கு பலரது ஆசையாக இருக்கின்றது. மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களது மனதில் பலவகையான ஆசைகள் இருக்கும். அவ்வாறு நமது மனதில் உள்ள பலவகையான ஆசைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதலில்

By ·

நம் வீட்டில் பண மழை பெய்ய வேண்டும், செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இங்கு பலரது ஆசையாக இருக்கின்றது. மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களது மனதில் பலவகையான ஆசைகள் இருக்கும். அவ்வாறு நமது மனதில் உள்ள பலவகையான ஆசைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது பணம் தான். எல்லோரும் உடனடியாக பணக்காரர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். செல்வம் சேரும் இடத்தில்தான் சேரும். செல்வத்தை ஈர்க்க சில வழிகள் உள்ளன.

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வீடு எப்பொழுதும் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் ஆசை இருக்கும். அம்பானி, அதானி போல நாமும் எப்போது பணக்காரர்கள் ஆவோம் என்ற ஏக்கம் பலருக்கு உண்டு. கோடி கோடியாய் செல்வம் பெருக வேண்டும் என்ற ஆசை சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்படி பணக்காரர் ஆவது குபேரனின் அருள் நமக்குக் கிடைக்குமா என்றும் ஏங்குகின்றனர். குபேர வழிபாடு கோடி செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. பணக்காரர் ஆகவேண்டும் மகாலட்சுமியின் அருள் வீட்டிற்குள் வரவேண்டும், குபேரன் அருள் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். கோடீஸ்வரர் ஆகவும் குபேரனின் அருள் கிடைக்கவும் என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த ஆன்மீகப் பதிவு உங்களுக்கு தான்.

குபேர மூலை

வாஸ்து வளம் தரக்கூடியது. நம்முடைய வீட்டில் உள்ள மூலைகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப்பொருத்து நேர்மறை எண்ணங்களும் நேர்மறை சக்திகளும் அதிகரிக்கும். குபேர மூலை, ஈசான்யா மூலையும் சரியாக இருந்தால் ஒருவரின் குடும்பம் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கும் என்கிறது வாஸ்து விதி. வீட்டின் தென்மேற்குச் சார்ந்த மூலையை நைருதி மூலை என்றும் குபேர மூலை என்றும் சொல்வார்கள். குபேர மூலையில் நாம் செய்யும் சிறு தவறு கூட நம்முடைய செல்வ வளத்தை வற்றச்செய்து விடுமாம். இந்த மூலையில் பணம், நகை வைக்கும் பீரோவை வைத்தால், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

குபேர வசிய வழிபாடு‌

குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும். உங்களுடைய வீட்டில் குபேர மூலையில் ஒரு சிறிய நாற்காலியை போட்டு அதன் மேலே ஒரு குபேர சிலையை வைத்து விடுங்கள். குபேர சிலையை மட்டும் தனியாக வைக்கக் கூடாது அதனால் லக்ஷ்மி தாயாரின் புகைப்படத்தையும் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.‌

குபேர சிலைக்கு பக்கத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில், ஒரு துண்டு பட்டை, குங்குமப்பூ, ஒரு எலுமிச்சம் பழம் இந்த மூன்று பொருட்களையும் போட்டு வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒரு மண் அகல் விளக்கில், மஞ்சள் குங்குமம் வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இவை இரண்டும் குபேர மூலையில் இருக்க வேண்டும். வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த குபேர விளக்கை ஏற்றி பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி குபேரருக்கு தாமரை மலரால் அர்ச்சனை செய்து, குபேர மந்திரத்தை உச்சரித்தால் அளவில்லாத செல்வவளம் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : குபேரரை போல் ஒரு பணக்காராக இருக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும்!

Recipes AMP · Quick view
View full