குலதெய்வம் தெரியவில்லை என்றால் பங்குனி உத்திரம் என்று நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் எது தெரியுமா ?

குலதெய்வம் வழிபாடு என்பது வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் செய்ய வேண்டும். அனைவருக்கும் அவர்களுடைய குலதெய்வம் எது என்று தெரிந்திருக்கும் எனவே அவர்களுடைய குடும்ப வழக்கப்படி குலதெய்வத்தை வழிபடுவது சிறப்பானது. ஆனால் ஒரு சிலருக்கு குலதெய்வம் எது என்று தெரியாது. அவர்களெல்லாம் பங்கையும்

By ·

குலதெய்வம் வழிபாடு என்பது வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் செய்ய வேண்டும். அனைவருக்கும் அவர்களுடைய குலதெய்வம் எது என்று தெரிந்திருக்கும் எனவே அவர்களுடைய குடும்ப வழக்கப்படி குலதெய்வத்தை வழிபடுவது சிறப்பானது. ஆனால் ஒரு சிலருக்கு குலதெய்வம் எது என்று தெரியாது. அவர்களெல்லாம் பங்கையும் உத்திரத்தன்று ஒரு தெய்வத்தை வழிபட்டால் குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். அப்படி நாம் அந்த தெய்வத்தை வழிபடுவதால் நமக்கு என்னவெல்லாம் பலன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பங்குனி உத்திர வழிபாடு

பொதுவாக தமிழர்கள் கடைபிடிக்கும் அனைத்து விரதங்களும் பௌர்ணமியை சார்ந்தே இருக்கும். அந்த வகையில் பங்குனி மாதம் வரக்கூடிய பௌர்ணமி மிகவும் விசேஷமானது. ஏன் சிறப்பானது என்று கேட்டால் தமிழ் மாதங்களில் வரக்கூடிய கடைசி மாதம் பங்குனி மேலும் ஜோதிடத்தின் படி வரக்கூடிய நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரம் உத்திரம் எனவே, இது மிகவும் சிறப்பானது. 2024 ல் பங்குனி உத்திரம் மார்ச் 25ஆம் தேதி பங்குனி 12ஆம் தேதி வருகிறது.

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்

64 கலைகளுடன் சந்திர பகவான் பரிபூரணமாக காட்சி தரும் நாளானது பங்குனி உத்திரம். இந்த பங்குனி உத்திரத்தன்று தான் பல தெய்வங்களுடைய திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது எனவே இந்த பங்குனி உத்திரம் மிகவும் மங்களகரமான நாள். அதனால் குலதெய்வ வழிபாட்டிற்கும் இந்த நாள் மிகவும் சிறந்தது. பொதுவாக மாதம் மாதம் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் மிகவும் நல்லது என்று சொல்வார்கள். அப்படி போக முடியவில்லை என்றால் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டும். இந்த பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ கோவிலுக்கு நேரடியாக செல்ல முடிந்தால் சென்று குலதெய்வத்தை வழிபடலாம் போக முடியாத சூழ்நிலைகள் உள்ளவர்கள் வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து குலதெய்வம் வழிபாடு மேற்கொள்ளலாம்.

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்

என்னதான் நாம் பல தெய்வங்களை வழிபட்டு வழங்கி பூஜை செய்து வந்தாலும் முதலில் குலதெய்வத்தை வணங்கினால் மட்டுமே மற்ற தெய்வங்களுடைய பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்ய தவறினால் அது குற்றமாக கருதப்படும் எனவே அந்த குற்றம் நம்முடைய வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். உதாரணமாக தொழிலில் நஷ்டம் கடன் பிரச்சினைகள் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருப்பது குழந்தைகளுக்கு படிப்பில் தோல்வி என அனைத்து விதமான பிரச்சினைகளும் நமக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவேண்டும்.

பொதுவாக அனைவருக்குமே அவர்களுடைய குலதெய்வம் எது என்று தெரியும் காலம் காலமாக அவர்களின் குல வழக்குப்படி குலதெய்வத்தை வழிபட்டு வருவார்கள் ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் மற்ற சில காரணங்களினால் குலதெய்வம் யார் என்று தெரியாமல் சிலர் இருப்பார்கள். பொதுவாக நம் வீட்டில் எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் ஜோதிடர்கள் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்றே கூறுவார்கள். அந்த வகையில் குலதெய்வம் யார் என்று தெரியாமல் இருப்பவர்கள் அந்த குலதெய்வ வழிபாடு செய்யாததால் ஏற்பட்ட தோஷத்திலிருந்து வழிப்பட ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும்.

குலதெய்வம் யார் என்று தெரியாதவர்கள் வழிபட வேண்டிய தெய்வம்

குலதெய்வம் யார் என்று தெரியாதவர்கள் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று குலதெய்வம் யார் என்று தெரியவில்லை என்று கூறி மனதார சொரிமுத்து அய்யனாரை வழிபட்டு வந்தால் கூடிய விரைவில் உங்கள் கனவிலோ அல்லது வேறு ஏதாவது மூலமாகவோ உங்களின் குலதெய்வத்தை அய்யனார் காட்டிக் கொடுப்பார். பாபநாசத்தில் உள்ள இந்த சொரிமுத்தையனார் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். எனது குலதெய்வம் யார் என்று தெரியவில்லை என்றால் சொரிமுத்து அய்யனாரை வழிபட்டு வரலாம்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க, இல்லாத குல தெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கவும் எளிமையான பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full