வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க, இல்லாத குல தெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கவும் எளிமையான பரிகாரம்!

- Advertisement -

பொதுவாக அனைவருடைய வீட்டிலும் அவர்களுடைய குலதெய்வம் இருந்தால் அவர்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்வார்கள். மீறி ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருந்தால் அவர்களது வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யவில்லை என்று அர்த்தம். அப்படி நம் வீடுகளில் நம் குலதெய்வம் இருக்கிறதா இல்லையா என்பதை சோதித்துப் பார்க்க நம் வீட்டு பூஜை அறையில் ஒரு விஷயத்தை செய்து பார்க்கலாம். அப்படி குலதெய்வம் நம் வீட்டில் இல்லை என்றால் குலதெய்வத்தை நம் வீட்டிற்கு வரவழைக்க ஒரு சிறிய பரிகாரம் செய்ய வேண்டும். மேலும் நம் வீட்டிற்கு வந்த குலதெய்வத்தை நம் வீட்டிலேயே தங்க வைப்பதற்கு நம் வீட்டில் தினமும் ஒரு தூபம் போட வேண்டும் அதை அனைத்தையும் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

-விளம்பரம்-

குலதெய்வம் நம் வீட்டில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள ஒரு எளிய சோதனை

வெள்ளிக்கிழமையில் தான் இதனை நாம் செய்ய வேண்டும். பூஜை அறை முழுவதும் சுத்தம் செய்து அலங்கரித்த பின்பு நம் வீட்டு பூஜை அறையில் உள்ள அனைத்து மின்சார விளக்குகள் மற்றும் மற்ற விலங்குகள் அனைத்தையும் அணைத்து விட வேண்டும். பிறகு ஒரு பெரிய தாம்பாள தட்டில் பச்சரிசியை பரப்பி வைத்து அதன் மேல் காமாட்சி விளக்கு வைத்து அதற்கு பூ வைத்து அலங்கரித்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் காமாட்சி விளக்கு இல்லை என்றால் அகல் விளக்கு கூட பயன்படுத்திக் கொள்ளலாம். காமாட்சி விளக்கில் எண்ணெய் ஊற்றி ஒரு தடிமனான திரி போட்டு விளக்கு ஏற்றுக் கொள்ளவும். அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு அந்த காமாட்சி விளக்கை பார்த்து உங்கள் குல தெய்வத்தை நினைத்துக் கொண்டு மனதார அந்த விளக்கை பாருங்கள் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கும் உங்களுக்கே அந்த விளக்கில் சில மாற்றங்கள் தெரியும். அப்படி மாற்றங்கள் தெரிந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் உண்டு என்று அர்த்தம். அப்படி அந்த விளக்கு எரிவது எந்த மாற்றமும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள் இப்பொழுது சொல்லப் போகும் இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள் குலதெய்வம் விரைவில் உங்கள் வீட்டில் வாசம் செய்யும்.

- Advertisement -

குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்கு வரவழைக்க ஒரு எளிமையான பரிகாரம்

காமாட்சி விளக்கு எறிவதில் எந்த மாற்றமும் தெரியவில்லை என்றால் கவலை கொள்ளாமல் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள். தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமைகளில் ஒரு அகல் விளக்கை உங்கள் வீட்டில் ஏற்றி வைத்து இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றி விளக்கை நோக்கி நன்றாக மனதார வேண்டிக் கொண்டு உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்கு வருமாறு அழைக்க வேண்டும். இப்படி மனதார மனம் உருகி வேண்டிக் கொண்டால் நிச்சயமாக உங்கள் வீட்டு குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வருகை தரும். தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமைகளில் இதனை செய்துவிட்டு அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை காமாட்சி விளக்கு சோதனை செய்ய வேண்டும் அப்படி செய்யும் போது கண்டிப்பாக காமாட்சி விளக்கு எறிவதில் உங்களுக்கு மாற்றம் தெரியும் உங்கள் வீட்டிற்கு உங்கள் குலதெய்வம் வருகை தந்திருக்கும்.

குலதெய்வத்தை எங்கும் போகவிடாமல் நம் வீட்டிலேயே வைத்திருக்க

குலதெய்வம் நம் வீட்டிலேயே தங்கிவிட்டால் நாம் வீட்டில் வரும் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும். அப்படி அடிக்கடி பிரச்சினை வந்து கொண்டே இருந்தால் நம் வீட்டில் உள்ள குல தெய்வத்திற்கு நாம் ஏதோ ஒரு குறை வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். அதற்காக நம் வீட்டில் தினமும் காலையும் மாலையும் இப்பொழுது சொல்லப் போகின்ற இந்த பொருட்களை எல்லாம் வைத்து தூபம் போட்டால் நிச்சயமாக உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டிலேயே தங்கிவிடும். முதலில் குங்குமப்பூ மல்லிகை பூ பன்னீர் ரோஜா பூ, ஏலக்காய் அரகஜா பச்சை கற்பூரம் அனைத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள். குங்குமப்பூ மல்லிகைப்பூ பன்னீர் ரோஜா பூ அனைத்தையும் நன்றாக காய வைத்து அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தினமும் உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி சாம்பிராணி கரண்டியில் கங்கு சாம்பிராணி மற்றும் அரைத்து வைத்த இந்த பொடி அனைத்தையும் சேர்த்து தூபம் போட்டால் வீட்டிற்கு வந்த குலதெய்வம் எங்கும் போகாமல் வீட்டிலேயே தங்கிவிடும். ஏனென்றால் இந்த தூபத்திற்கு இறை சக்தியை வசியம் செய்யும் சக்தி உள்ளது. நம்பிக்கையோடு இது அனைத்தையும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

-விளம்பரம்-