- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை சரி செய்வது, மலச்சிக்கலைத் தீர்ப்பது வரை கேரட்டில் பல்வேறு நன்மைகள் உள்ளன. காரக்குழம்பு, வத்த குழம்பு போன்ற சுவையான குழம்பு வகைகளில் கேரட் சௌசௌ மசாலா குழம்பும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த கேரட் சௌசௌ குழம்பு சப்பாத்திக்கும் பொருத்தமாக இருக்கும். பெரும்பாலும் நம் எல்லோரது வீடுகளிலும் கேரட்டில் சாம்பார் வைப்பதை தான் வழக்கமாக வைத்திருப்போம். மிஞ்சிப்போனால் கேரட்டை வைத்து சில பேர் வீடுகளில் வருவல் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கேரட்டை வைத்து மசாலாக்களை அரைத்து ஊற்றி, ஒரு குழம்பு எப்படி வைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். ஒரு வித்தியாசமான, அதே சமயம் சுவையான ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கேரட் மற்றும் சௌசௌ உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். இந்த கேரட் சௌசௌ குழம்பு சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, இட்லி, சாதம் என அனைத்திற்கும் அற்புதமாக இருக்கும். கேரட் குழம்பு என்றதும் பலர் முகம் சுளிக்கலாம். ஆனால் இந்த குழம்பில் கேரட்டை நன்கு வதக்கி செய்வதால், நிச்சயம் இந்த குழம்பை நினைத்து சலிப்பு வராது. சுவையான கேரட் சௌசௌ மசாலா குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு சூப்பரான கேரட் முட்டைகோஸ் ஊத்தப்பம் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் கேரட் மற்றும் சௌசௌவை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வற்றல், தனியா, சீரகம், சோம்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
இவை சூடு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு மை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கி வைத்துள்ள கேரட் மற்றும் சௌசௌ சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
பின் சௌசௌ முக்கால் பாகம் வெந்தவுடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான கேரட் சௌசௌ மசாலா குழம்பு தயார்.






