இரவு டிபனுக்கு சூப்பரான கேரட் முட்டைகோஸ் ஊத்தப்பம் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, மிளகாய் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை. மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே. காலையில் எப்பொழுதும் பொங்கல், இட்லி, தோசை என்று அரைச்ச மாவையே திரும்பி திரும்பி அரைக்கிறீர்களா?? கவலை வேண்டாம், சுவையும், சத்தும் கலந்த ஒரே உணவு கேரட் ஊத்தாப்பம். ஊத்தாப்பம் அப்படினாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். கடைகளில் ஊத்தாப்பங்கள் வாங்கி சாப்பிடாத ஆட்களே இருக்க மாட்டாங்க.

-விளம்பரம்-

அந்த காலத்தில் பாட்டி செய்யும் ஊத்தாப்பத்தின் சுவையை தனி. அதை அடிச்சிக்க ஆளே கிடையாது. அந்த ஊத்தாப்பத்தை வெச்சி தான் இன்றைய காலத்தில் பீட்சா என்ற ஒரு உணவை கண்டுபிடித்து இருக்கிறார்கள். நமது தென்னிந்திய உணவு வகையில் கொழுப்பு குறைந்த, புரதம் நிறைந்த உணவுகள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் ஊத்தாப்பம். புரதம் உள்ள உணவுகளை நீங்கள் உண்ணும்போது உங்களுக்கு நிறைவாக உண்ட உணர்வைத் தரும். எடை அதிகரிப்பும் ஏற்படுத்தாது. இந்த கேரட் ஊத்தாப்பத்துக்கு கொத்தமல்லி சட்னி வச்சு சாப்பிடும்போது அவ்வளவு ஒரு சுவையா இருக்கும். இந்த ஊத்தாப்பத்தை வீட்லயே செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாவும் இருக்கும் அதே நேரம் பிடிச்ச மாதிரியான ஒரு உணவாகவும் இருக்கும்.

- Advertisement -
Print
5 from 1 vote

கேரட் ஊத்தப்பம் | Carrot Uthappam Recipe In Tamil

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, மிளகாய் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை. மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே. காலையில் எப்பொழுதும் பொங்கல், இட்லி, தோசை என்று அரைச்ச மாவையே திரும்பி திரும்பி அரைக்கிறீர்களா?? கவலை வேண்டாம், சுவையும், சத்தும் கலந்த ஒரே உணவு கேரட் ஊத்தாப்பம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: Carrot Uthappam
Yield: 4 Peole
Calories: 25kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 4 கேரட்
  • 1/4 கப் முட்டைகோஸ்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 4 கப் தோசை மாவு
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டைக்கோஸை நறுக்கி குக்கரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கேரட்டை நன்கு கழுவி விட்டு தோல் நீக்கி துருவி வைத்துக்கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ முட்டைகோஸ் நன்றாக ஆறியதும் அதை ஒரு‌ மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு தோசை மாவில் முட்டைகோஸ் விழுது, துருவிய கேரட், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நாம் கலந்து வைத்த மாவை ஊத்தப்பமாக ஊற்றி எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கேரட் ஊத்தப்பம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 25kcal | Carbohydrates: 6g | Protein: 5g | Fat: 4.7g | Sodium: 7.4mg | Potassium: 320mg | Fiber: 1.5g | Vitamin A: 83IU | Vitamin C: 6.22mg | Calcium: 33mg | Iron: 12mg

இதனையும் படியுங்கள் : காலை டிபனாக ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! 2 ஊத்தப்பம் ஆதிகமாவே சாப்பிடுவாங்க!