Home சைவம் காலை டிபனாக ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! 2...

காலை டிபனாக ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! 2 ஊத்தப்பம் ஆதிகமாவே சாப்பிடுவாங்க!

பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் காலை டிபன் ஆக இட்லி தோசை ஊத்தப்பம் சப்பாத்தி இடியாப்பம் என விதவிதமாக இருந்தாலும், ஒரு சிலர் தேடுவது என்னமோ தோசையை தான். அதிலும் ஒரு சிலருக்கு ஊத்தப்பம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த ஊத்தப்பத்தில் வெங்காய ஊத்தப்பம் பொடி ஊத்தப்பம் என்று வித்தியாசமாக நிறைய ஊத்தப்பங்கள் இருந்தாலும் இன்று நான் அதிலும் சற்று வித்தியாசமாக ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் செய்யப் போகிறோம்.

-விளம்பரம்-

பெரும்பாலும் குழந்தைகள் காய்கறிகளை அப்படியே கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் அதனால் அவர்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒன்று கலந்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த வகையில் இன்று நாம் நிறைய காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம் செய்யப் போகிறோம். இதில் இன்னும் ஸ்பெஷலான ஒன்று என்றால் ஓட்ஸ். இந்த ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஓட்ஸை பலவிதமாக செய்து சாப்பிடுவார்கள்.

ஓட்ஸ் கஞ்சி ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கும், ஆனால் ஓட்ஸ் சாப்பிட்டியா ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சிலர் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பத்தை முயற்சி செய்து பார்க்கலாம் சுவை அருமையாக இருக்கும். இந்த சுவையான அருமையான ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் எப்படி செய்வது என்று வாருங்கள் பார்க்கலாம்.

Print
5 from 1 vote

ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் | Oats Veg Othappam Recipe In Tamil

பெரும்பாலும் குழந்தைகள் காய்கறிகளை அப்படியே கொடுத்தால்சாப்பிட மாட்டார்கள் அதனால் அவர்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒன்று கலந்து கொடுத்தால்விரும்பி சாப்பிடுவார்கள் அந்த வகையில் இன்று நாம் நிறைய காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம்செய்யப் போகிறோம். இதில் இன்னும் ஸ்பெஷலான ஒன்று என்றால் ஓட்ஸ். இந்த ஓட்ஸில் நார்ச்சத்துக்கள்நிறைய உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஓட்ஸை பலவிதமாக செய்து சாப்பிடுவார்கள்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: oats veg Othappam
Yield: 4
Calories: 141kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 2 கப் ஓட்ஸ்
  • 1/2 கப் ரவை
  • 1/2 கப் கடலை மாவு
  • 2 1/2 கப் தயிர்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/4 கப் குடை மிளகாய்     
  • 1/4 கப் கேரட்
  • 1/4 கப் முட்டை கோஸ்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன் உடைத்த முந்திரி பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் ஓட்ஸ் மற்றும் ரவையை சேர்த்த வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு கடலை மாவை ஒரு கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். கேரட் முட்டைகோஸ் குடைமிளகாய் அனைத்தையும் சிறியதாக நறுக்கி கொள்ளவும்
  • கடலை மாவு மற்றும் ஓட்ஸ் ரவை மாவை பாத்திரத்தில் போட்டு நறுக்கிய காய்கறிகள் தேங்காய் துருவல்உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  • அதில் முந்திரி பருப்பு மிளகு சீரகம் அனைத்தையும் பொடியாக்கி கலந்து கொண்டு எடுத்து வைத்துள்ள தயிர் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • தோசை மாவு பதத்திற்கு கலந்து பிறகு ஒரு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி ஊத்தாப்பமாக இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மிகவும் ஆரோக்கியமான ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் சுட சுட தயார்.

Nutrition

Serving: 2nos | Calories: 141kcal | Carbohydrates: 17g | Protein: 5.4g | Vitamin A: 49.2IU | Calcium: 25mg | Iron: 1mg