வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

- Advertisement -

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த தண்ணீர் பழங்களை நம்ம கோடை காலத்தில் நிறைய சாப்பிட்டோம் அப்படின்னா நமக்கு சூடு பிடிக்கவே பிடிக்காது நம்ம உடல் எப்பவுமே குளிர்ச்சியா சூப்பரா இருக்கும். அந்த வகையில இந்த வெள்ளரிக்காய் வச்சு சூப்பரான வெள்ளரிக்காய் ஜூஸ் தான் செய்யப் போறோம்.

-விளம்பரம்-

பொதுவா எல்லா குழந்தைகளுக்கும் எல்லா காய்கறிகளும் பழங்களும் பிடிக்காது அப்படி பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த வெள்ளரிக்காய் வச்சு சூப்பரான ஜூஸ் போட்டு கொடுக்கலாம் கண்டிப்பா வேண்டி கொடுப்பாங்க. குழந்தைகளை ஏமாத்தி ஒரு சில விஷயத்தை சாப்பிட வைக்கும் போது அவங்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுத்தோம்.

- Advertisement -

அப்படிங்கற சந்தோஷம் நமக்கு கிடைக்கும் அதனால எப்பவுமே அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சு கொடுங்க அந்த வகையில இப்ப நம்ம இந்த வெள்ளரி ஜூஸ் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் கொடுக்கலாம் எல்லாருக்குமே ரொம்ப ஆரோக்கியமானதும் கூட.

உங்க வீட்ல நிறைய வெள்ளரிக்காய் இருக்கு அது ஃபுல்லா சாப்பிட முடியல அப்படின்னா இந்த மாதிரி வெயிலுக்கு ஏத்த வெள்ளரிக்காய் ஜூஸ் செஞ்சு கொடுங்க சட்டுனு காலி ஆகிவிடும்.இந்த வெயில் காலத்துக்கு நம்ம தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் கூட ரொம்ப நல்லது. இதுல நம்ம இஞ்சி எலுமிச்சை சாறு புதினா இலைகள் எல்லாமே சேர்க்கறதால ரொம்பவே புத்துணர்ச்சியா இருக்கும். அதே நேரத்துல குளிர்ச்சி சேராதவங்களுக்கு சளியும் பிடிக்காது. இப்ப வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான வெள்ளரிக்காய் ஜூஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

வெள்ளரி ஜூஸ் | Cucumber Juice Recipe In Tamil

வீட்ல நிறைய வெள்ளரிக்காய் இருக்கு அது ஃபுல்லா சாப்பிட முடியல அப்படின்னா இந்த மாதிரி வெயிலுக்கு ஏத்த வெள்ளரிக்காய் ஜூஸ் செஞ்சு கொடுங்க சட்டுனு காலி ஆகிவிடும்.இந்த வெயில் காலத்துக்கு நம்ம தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் கூட ரொம்ப நல்லது. இதுல நம்ம இஞ்சி எலுமிச்சை சாறு புதினா இலைகள் எல்லாமே சேர்க்கறதால ரொம்பவே புத்துணர்ச்சியா இருக்கும். அதே நேரத்துல குளிர்ச்சி சேராதவங்களுக்கு சளியும் பிடிக்காது. இப்ப வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான வெள்ளரிக்காய் ஜூஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
Prep Time15 minutes
Total Time15 minutes
Course: Drinks
Cuisine: tamilnadu
Keyword: Cucumber Juice
Yield: 5
Calories: 306kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 வெள்ளரிக்காய்
  • 1 டீஸ்பூன் சியா விதைகள்
  • ஐஸ் கட்டிகள் தேவையான அளவு
  • 2 டேபிள்ஸ்பூன் தேன்
  • புதினா இலைகள் சிறிதளவு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 எலுமிச்சைபழம்

செய்முறை

  • தண்ணீரில் சியா விதைகளை முதலில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • வெள்ளரிக்காயின் தோல் நீக்கி சிறிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்
     
  • அதில் ஒரு துண்டு இஞ்சி தேன் புதினா இலைகள் எலுமிச்சை பழச்சாறு ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • அரைத்ததை வடிகட்டி எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி சியா விதைகளை கலந்து பரிமாறினால் சுவையான வெயிலுக்கு ஏற்ற குளு குளு வெள்ளரி ஜூஸ் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 290g | Protein: 12g | Sodium: 11.7mg | Potassium: 230mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : வெயிலுக்கு ஏற்ற ஒரு இதமான சுவையான புதினா ஜூஸ் ஒரு தரம் இப்படி செஞ்சு பாருங்க!

-விளம்பரம்-