உங்கள் வீட்டில் செல்வம் பெருக தீபாவளியன்று இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்!!
தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆனந்தம் தான். நமது தமிழகத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும். தீபாவளி என்றால் எண்ணெய் குளியல், கோவிலுக்கு செல்லுதல், வகைவகையான பலகாரங்களை சாப்பிடுதல், பட்டாசுகள் வெடித்தல் மட்டுமல்ல…! வ
தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆனந்தம் தான். நமது தமிழகத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும். தீபாவளி என்றால் எண்ணெய் குளியல், கோவிலுக்கு செல்லுதல், வகைவகையான பலகாரங்களை சாப்பிடுதல், பட்டாசுகள் வெடித்தல் மட்டுமல்ல…! வீட்டில் செல்வம் நிலைக்க பூஜை செய்வதும் தான். கையில் காசு இருந்தாலும் பையில் தங்கலையே என்று இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றன. வருமானத்தை விட செலவுகள் தான் அதிகம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வருமானம் பெருக தீபாவளி திருநாளில் லட்சுமி குபேரரை வணங்கினால் செல்வம் பெருகும். இந்த பூஜையை செய்ய தீபாவளியே உகந்த நாளாகும். இதை செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். செல்வம் சேர தீபாவளி அன்று என்ன செய்ய வேண்டும் என இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.
செல்வ வளத்தை அதிகரிக்க வழிபாடு
ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது தீபாவளி. ஐப்பசி மாத அமாவாசைக்கு முன் தினம் சதுர்த்தசி திதி நாளில் கொண்டாடப்படும் எனவேதான் இதற்கு, ‘நரக சதுர்த்தசி’ என்கிற பெயரும் உண்டு. இந்த நாள் வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல வாழ்வை வளமாக்கும் ஒரு வழிபாட்டு நாள் என்கின்றன ஞான நூல்கள். வட இந்தியாவில் இந்த நாளில் புதுக்கணக்கும் தொடங்கும் வழக்கம் உள்ளது. அதற்கு முன்பாக மகாலட்சுமித் தாயாருக்கும் குபேரருக்கும் பூஜை செய்வார்கள். இந்த ஆண்டு அமாவாசை அக்டோபர் 20 -ம் தேதி மாலையே வந்துவிடுவதால் அன்று மாலையும் பூஜை செய்யலாம். அடுத்த நாள் மாலையும் பூஜை செய்யலாம். இந்த நாளில் யார் ஒருவர் மகாலட்சுமி தாயாரை நினைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு பதினாறு செல்வங்களும் கிடைக்க பெற்று சிறப்புடன் வாழ்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
மந்திரம்
” ஸ்ரீம் சௌபாக்கிய லட்சுமி குபேராய நமஹ “
மந்திரம் உச்சரிக்கும் முறை
இந்த மந்திரத்தை உச்சரிக்க கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து முழு மனதுடன் லட்சுமி குபேரனை நினைத்து 30 நிமிடங்கள் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை பூஜையறையில் அமர்ந்து தான் உச்சரிக்க வேண்டும் என்று எதுவும் கிடையாது. நீங்கள் விருப்பப்பட்ட இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை இவர்கள் தான் உச்சரிக்க வேண்டும் என்று எதுவும் கிடையாது யார் வேண்டுமானாலும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை அக்டோபர் மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள் அல்லது அக்டோபர் மாதம் 21ஆம் தேதி விடியற்காலை 4 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள் இரண்டு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் செய்ய வேண்டும். முழு மனதோடு லட்சுமி குபேரரை நினைத்து இந்த வழிபாட்டை செய்து பாருங்கள் லட்சுமி குபேரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : வீடு முழுக்க லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டுமா ?