வெறும் 10 ரூபாயில் கோடி கடனையும் அடைந்து விடலாம் செப்டம்பர் மாதத்தின் சக்திவாய்ந்த மைத்ரேய முகூர்த்தம்!
இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு மனிதனாலும் கடன் வாங்காமல் காலத்தை தள்ள முடியாது. அவ்வளவு ஏன் நம்மைப் படைத்த கடவுளே கடன் வாங்கிக் கல்யாணம் செய்துவிட்டு, தினந்தோறும் அந்தக் கடனுக்கு வட்டி செலுத்திக்கொண்டிருக்கிறார். அதே போல் அனைத்து நாடுகளுமே கடன் வலையில் சிக்கித் தவித்து வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு மனிதனாலும் கடன் வாங்காமல் காலத்தை தள்ள முடியாது. அவ்வளவு ஏன் நம்மைப் படைத்த கடவுளே கடன் வாங்கிக் கல்யாணம் செய்துவிட்டு, தினந்தோறும் அந்தக் கடனுக்கு வட்டி செலுத்திக்கொண்டிருக்கிறார். அதே போல் அனைத்து நாடுகளுமே கடன் வலையில் சிக்கித் தவித்து வருகின்றன. கடன் வாங்கினாலும் அதை எப்படி திருப்பிச் செலுத்துவது என்பது நம்மில் பலருக்கும் தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறோம்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன், வியாதி போன்ற கர்மவினைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும். உங்கள் கடன்களில் இருந்து விடுபட இந்த மைத்ர முகூர்த்ததை கடைபிடியுங்கள். அதாவது யார் எல்லாம் கடன் பிரச்சனையால் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
மைத்ரேய முகூர்த்தம்
அஸ்வினி நட்சத்திரமும் மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு ‘மைத்ர முகூர்த்தம்’ என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடனின் ஒரு சிறு தொகையை கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் விரைவில் தீர்ந்துவிடும். அத்துடன் செவ்வாயின் நட்சத்திரமும் சனிக் கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம்.
பரிகாரம் செய்யும் முறை
எவ்வளவோ பெரிய கடனாக இருந்தாலும் இந்த நேரத்தை பயன்படுத்தி நாம் கடன் அடைக்கும் பொழுது எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் நமக்கு அடைந்து விடும். யாராக இருந்தாலும் மொத்த கடனையும் திரும்ப அடைத்து விட வேண்டும் என்று தான் விரும்புவார்கள் ஆனால் அது நம்மளால் இயலாது. அதனால் நாம் கடன் அடைப்பதில் சிறு தொகையை நமது வீட்டிலேயே எடுத்து வைக்க வேண்டும். அப்படி எடுத்து வைக்கும் பொழுது நாம் கடன் வாங்கிய நபரின் பெயர் அல்லது வங்கியின் பெயரை ஒரு மொய்க்கவரில் எழுதிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் மைத்ரேய முகூர்த்த நேரம் வரும். இந்த மாதத்தில் நாம் சிறிதளவு பணத்தை எடுத்து வைக்க வேண்டும். முதலில் மொய்க்கவர் மற்றும் பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். பிரியாணி இலை பல தாந்திரீக விஷயங்களுக்கு பயன்படும் முக்கிய பொருள்களுள் ஒன்று. இந்த இலையை நாம் பயன்படுத்தும் பொழுது நாம் செய்யும் பரிகாரம் உடனடியாக பலனளிக்கும். பிரியாணி இலையில் உங்களுடைய கடன் தொகை மற்றும் உங்களுடைய கடன் தீர வேண்டும் என எழுதிக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் ஒரு சிறிய தொகையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதாவது 100 ரூபாயோ அல்லது 500 ரூபாயோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வாசனை பொருட்களான ஜவ்வாது, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் இதில் ஏதேனும் ஒன்றை அந்த கவரில் வைத்து விடுங்கள்.
பிரியாணி இலை
இப்பொழுது இந்த கவரில் பிரியாணி இலை, நாம் எடுத்து வைத்திருக்கும் பணம் மற்றும் ஒரு வாசனை பொருள் இருக்கும். இந்த கவரை சாமியின் புகைப்படத்திற்கு முன்னால் அல்லது பூஜை அறையில் அல்லது நாம் வைக்கும் பட்டு துணியில் வைத்து விடலாம். இதனை நாம் மாதம் மாதம் வரும் மைத்திரேய முகூர்த்த நேரத்தில் எடுத்து வைக்க வேண்டும். ஒரு மாதம் இதனை செய்து விட்டு மற்றொரு மாதம் செய்யாமல் இருக்கக் கூடாது. ஒருவருக்கு இரண்டு, மூன்று கடன்கள் இருந்தாலும் ஒவ்வொரு கடனுக்கும் ஒரு தொகையை எடுத்து வைக்கலாம்.
இதனையும் படியுங்கள் : https://recipes.behindtalkies.com/things-never-do-at-home-in-night-in-tamil/
ஒருவேளை நாம் கடனை அடைத்து விட்டோம் என்றால் நாம் எடுத்து வைத்திருக்கும் பிரியாணி இலையை கால்படாத இடத்தில் எரித்து விட வேண்டும் மற்றும், அந்த பேப்பரை கிழித்துப் போட்டு விட வேண்டும். இதனையும் நாம் மைத்ரேய முகூர்த்த நேரத்தில்தான் செய்ய வேண்டும். இந்த நேரத்தை பயன்படுத்தி உங்கள் வேண்டுதல்களை நீங்கள் செய்யும் பொழுது உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் பலிக்க ஆரம்பிக்கும்.