இரவு நேரத்தில் வீட்டில் இந்த விஷயங்களை செய்தால் பணம் துளியும் சேரவே சேராது!

- Advertisement -

செல்வத்திற்கு அதிபதியானவள் மகாலட்சுமி தாயார் இது நாம் அனைவரும் அறிந்த உண்மையை!! இவளை நாம் வழிபட்டால் செல்வ செழிப்புடன் வாழலாம். இந்து புராணங்களில் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதன்படி அஸ்தமனத்திற்கு பின்னர் சில விஷயங்களை நாம் செய்தால் மகாலட்சுமி தயாரானவள் கோபமடைந்து வீட்டில் பண இழப்பை ஏற்படுத்துவாள் என நம்பப்படுகிறது. இந்த பதிவில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி காண்போம் வாருங்கள்.

-விளம்பரம்-

தலைமுடியை சீவக் கூடாது

நம்மில் பெரும்பாலான பெண்களுக்கு இரவில் தலை சீவும் வழக்கம் உள்ளது. ஆனால் அப்படி செய்யக்கூடாது, ஏனென்றால் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருக்கும் நாம் தூங்கும் பொழுது தலையை விரித்துக் கொண்டு தூங்கினாலும் அல்லது இரவு நேரத்தில் தலைமுடியை சீவினாலோ நமது வீட்டிலும் எதிர்மறையாற்றல் அதிகரித்து பண இழப்பை சந்திக்க நேரிடும்.

- Advertisement -

சமையலறையில் அழுக்கு பாத்திரத்தை வைத்திருக்கக் கூடாது

பொதுவாக இரவு சமையலுக்குப் பின் நாம் அந்த பாத்திரங்களை காலையில் விளக்குவது தான் வழக்கமான ஒன்று. ஆனால் அப்படி செய்யக்கூடாது ஒருவரது வீட்டில் மகாலட்சுமி தாயார் குடியிருக்க வேண்டும் என்றால் அவர்கள் சமையலறையை முதலில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இரவு சமையல் அறையை அசுத்தமாக வைத்துவிட்டு தூங்கினால் அந்த வீட்டில் வறுமை அதிகரித்து கடன் பிரச்சனையும் அதிகரிக்கும். எனவே எந்த தவறை செய்யாதீர்கள்.

பால், தயிர், உப்பு போன்றவற்றை மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள்

நாம் மாலை வேளையில் பால், தயிர், உப்பு மற்றும் மஞ்சள் போன்றவற்றை ஒருவருக்கு தானமாக வழங்கும் பொழுது குடியிருக்கும் வீட்டில் உள்ள மகாலட்சுமி ஆனவள் அவர்களுடனே சென்றுவிடுவாள் என்பது நாம் எல்லோரும் அறிந்து ஒன்றுதான். எனவே இப்பொருட்களை மாலை வேளையில் தானமாக கொடுப்பதை தவிர்த்து விடுங்கள், இல்லையேல் உங்கள் வீட்டில் பணம் பிரச்சனை ஏற்படும்.

நகங்கள் மற்றும் முடியை வெட்டக்கூடாது

இரவு நேரத்தில் நாம் நகங்கள் மட்டும் முடியை வெட்டுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இரவில் தான் மகாலட்சுமி தாயார் நமது வீட்டிற்கு வருவார் என நம்பப்படுகிறது. அப்படி அவர் வருகை தரும் வேளையில் நாம் இச்செயல்களை செய்தால் அவருக்கு அவமரியாதையாக கருதப்படும்.

-விளம்பரம்-

வீட்டை சுத்தம் செய்யாதீர்

வாஸ்துப்படி, வீட்டை சுத்தம் செய்ய சிறந்த காலம் காலை வேளை தான். இருப்பினும் சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன் எப்போது வேண்டுமானாலும் வீட்டை பெருக்கலாம். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பெருக்குவது நல்லதல்ல. இரவு நேரத்தில் வீட்டை பெருக்கினால், லட்சுமி தேவி வீட்டில் தங்கமாட்டார். இதனால் வீட்டு உறுப்பினர்களிடையே பிரச்சனைகள் அதிகரிக்கும், வீட்டின் மகிழ்ச்சி மற்றும் அமைதி சீர்குலையும்.

துணியை துவைக்காதீர்

பொதுவாக மாலை வேளையில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருக்கும். நாம் இரவு நேரத்தில் துணியை துவைத்து வெளியில் காயப்போடும் பொழுது அந்த ஆற்றல்கள் நம் துணியில் இறங்கி நாம் அதனை அணியும் பொழுது நம்மளை சுற்றியும் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும். பொதுவாக அது நமக்கு எந்த வேலையிலும் தோல்வியையே தேடி தரும் எனவே நம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் இரவில் நாம் துணி துவைப்பதை நிறுத்த வேண்டும்.

இப்பதிவின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருப்பேன் இதனை உங்கள் வீட்டில் செய்யும் பழக்கம் இருப்பின் அதனை உடனே நிறுத்தி விடுங்கள் அப்படி செய்கையில் மகாலட்சுமி தாயார் மனமகிழ்ந்து உங்களுக்கு நல்லாசி வழங்குவார்

-விளம்பரம்-