Advertisement
சட்னி

இட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான மாங்காய் மிளகாய் சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

கோடை காலத்தில் மாங்காய் அதிகளவில் கிடைக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். அந்தவகையில் இப்பொழுது மாங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகிறோம். தென்னிந்திய சமையலில் காலை, இரவு என இரு வேளைகளிலும் நிச்சயம் இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதாவது டிபன் இடம் பெறும். வழக்கமாக இட்லி, தோசை போன்றவற்றிக்கு நாம் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஏதேனும் புதுமையாக சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.

மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் விலை குறைவில் கிடைக்கும். பொதுவாக மாங்காய் வைத்து சாம்பார், பச்சடி, ஊறுகாய், மாங்காய் சாதம் போன்றவற்றை அதிக அளவில் செய்து இருப்போம். மாங்காய் வைத்து சுவையான சட்னியை செய்யலாமா ! இது நாம் வழக்கமாக செய்யும் சட்னிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும். இது கர்பிணிகள் சாப்பிட்டால் வாந்தி போன்ற உபாதைகள் வருவது குறையும். இந்த மாங்காய் சட்னியை பலவாறு சமைப்பார்கள். இப்படி மாங்காய் கொண்டு செய்யப்படும் சட்னியானது‌ காரம், புளிப்பு என்ற பல சுவைகள் கலந்து, அருமையாக இருக்கும். இந்த சட்னியை வெள்ளை சாதத்துடன், நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

Advertisement

முக்கியமாக இந்த மாங்காய் மிளகாய் சட்னி செய்வது மிகவும் சுலபம். தொற்று நோய்களிலிருந்து நம்மை காக்க வேண்டும் என்றால் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. எனவே இந்த மாங்காயை கொண்டு தயாரிக்கும் சட்னி நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வாருங்கள்! சுவையான மாங்காய் சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மாங்காய் மிளகாய் சட்னி | Mangai Milakai Chutney Recipe In Tamil

Print Recipe
கோடை காலத்தில் மாங்காய் அதிகளவில் கிடைக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்யலாம்.
Advertisement
அந்தவகையில் இப்பொழுது மாங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகிறோம். தென்னிந்திய சமையலில் காலை, இரவு என இரு வேளைகளிலும் நிச்சயம் இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதாவது டிபன் இடம் பெறும். வழக்கமாக இட்லி, தோசை போன்றவற்றிக்கு நாம் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஏதேனும் புதுமையாக சட்னி
Advertisement
செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword Mangai Milakai Chutney
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 99

Equipment

  • 1 வாணலி
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தாளிப்பு கரண்டி

Ingredients

  • 1 கப் மாங்காய்
  • 10 பச்சை மிளகாய்
  • 1 கப் கொத்தமல்லி
  • 1 கப் புதினா
  • 5 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் மாங்காயை நன்கு கழுவி விட்டு தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு புதினா, மல்லி இலையை நன்கு தண்ணீரில் அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாங்காய், மல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் ‌உளுந்தம்‌ பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மாங்காய் பச்சை மிளகாய் சட்னி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 99kcal | Carbohydrates: 25g | Protein: 5.4g | Fat: 1.6g | Sodium: 26mg | Potassium: 277mg | Fiber: 2.6g | Vitamin A: 76IU | Vitamin C: 60.1mg | Calcium: 14mg | Iron: 1.3mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் மாங்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்கள்! இந்த வருடம் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய ரெசிபியாம்!

Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

9 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

9 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

9 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

11 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

12 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

12 மணி நேரங்கள் ago