இட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான மாங்காய் மிளகாய் சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

கோடை காலத்தில் மாங்காய் அதிகளவில் கிடைக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். அந்தவகையில் இப்பொழுது மாங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகிறோம். தென்னிந்திய சமையலில் காலை, இரவு என இரு வேளைகளிலும் நிச்சயம் இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதாவது டிபன் இடம் பெறும். வழக்கமாக இட்லி, தோசை போன்றவற்றிக்கு நாம் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஏதேனும் புதுமையாக சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.

-விளம்பரம்-

மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் விலை குறைவில் கிடைக்கும். பொதுவாக மாங்காய் வைத்து சாம்பார், பச்சடி, ஊறுகாய், மாங்காய் சாதம் போன்றவற்றை அதிக அளவில் செய்து இருப்போம். மாங்காய் வைத்து சுவையான சட்னியை செய்யலாமா ! இது நாம் வழக்கமாக செய்யும் சட்னிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும். இது கர்பிணிகள் சாப்பிட்டால் வாந்தி போன்ற உபாதைகள் வருவது குறையும். இந்த மாங்காய் சட்னியை பலவாறு சமைப்பார்கள். இப்படி மாங்காய் கொண்டு செய்யப்படும் சட்னியானது‌ காரம், புளிப்பு என்ற பல சுவைகள் கலந்து, அருமையாக இருக்கும். இந்த சட்னியை வெள்ளை சாதத்துடன், நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -

முக்கியமாக இந்த மாங்காய் மிளகாய் சட்னி செய்வது மிகவும் சுலபம். தொற்று நோய்களிலிருந்து நம்மை காக்க வேண்டும் என்றால் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. எனவே இந்த மாங்காயை கொண்டு தயாரிக்கும் சட்னி நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வாருங்கள்! சுவையான மாங்காய் சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Print
5 from 1 vote

மாங்காய் மிளகாய் சட்னி | Mangai Milakai Chutney Recipe In Tamil

கோடை காலத்தில் மாங்காய் அதிகளவில் கிடைக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். அந்தவகையில் இப்பொழுது மாங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகிறோம். தென்னிந்திய சமையலில் காலை, இரவு என இரு வேளைகளிலும் நிச்சயம் இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதாவது டிபன் இடம் பெறும். வழக்கமாக இட்லி, தோசை போன்றவற்றிக்கு நாம் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஏதேனும் புதுமையாக சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Mangai Milakai Chutney
Yield: 4 People
Calories: 99kcal

Equipment

  • 1 வாணலி
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தாளிப்பு கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் மாங்காய்
  • 10 பச்சை மிளகாய்
  • 1 கப் கொத்தமல்லி
  • 1 கப் புதினா
  • 5 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மாங்காயை நன்கு கழுவி விட்டு தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு புதினா, மல்லி இலையை நன்கு தண்ணீரில் அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாங்காய், மல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் ‌உளுந்தம்‌ பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மாங்காய் பச்சை மிளகாய் சட்னி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 99kcal | Carbohydrates: 25g | Protein: 5.4g | Fat: 1.6g | Sodium: 26mg | Potassium: 277mg | Fiber: 2.6g | Vitamin A: 76IU | Vitamin C: 60.1mg | Calcium: 14mg | Iron: 1.3mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் மாங்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்கள்! இந்த வருடம் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய ரெசிபியாம்!