இன்று நாம் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ஒரு சட்னி ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று மைசூர் ரோட்டு கடை சட்னி தான் செய்து பார்க்க போகிறோம். இந்த சட்னியை வெறும் ஐந்து நிமிடத்தில் எளிதாகவும் வேகமாகவும் செய்து விடலாம் எந்த பொருட்களையும் நாம் கடாயில் வதக்க தேவையில்லை. இதனால் உங்களுக்கு உடனடியாக எதுவும் சட்னி செய்ய வேண்டி
இதையும் படியுங்கள் : சுவையான கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி ?
இருந்தால் கண்டிப்பாக இந்த மைசூர் ரோடு கடை சட்னி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சட்னியாக மாறிபோகும் அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்களை அடுத்த முறை இதுபோல் செய்ய சில கேட்பார்கள் அதனால் இன்று இந்த மைசூர் ரோட்டு கடை சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
மைசூர் ரோட்டு கடை சட்னி | Mysore Road Side Shop Chutney Recipe in Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
சட்னி அரைக்க
- 5 பச்சை மிளகாய்
- 4 பல் பூண்டு
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- ½ கப் வேர்கடலை
- ¼ கப் பொட்டு கடலை
- 1 புளி சிறிய எலுமிச்சை அளவு
- கொத்தமல்லி சிறிது
- கல் உப்பு தேவையான அளவு
சட்னி தாளிக்க
- 2 tbsp எண்ணெய்
- 1 tsp கடலை பருப்பு
- 1 tsp உளுந்த பருப்பு
- ½ tsp சீரகம்
- 1 tsp கடுகு
- 2 வர மிளகாய்
செய்முறை
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அதில் நறுக்கிய ஐந்து பச்சை மிளகாய், நான்கு பல் பூண்டு, நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், அரை கப் வேர்க்கடலை, கால் கப் பொட்டுக்கடலை, ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளி, சிறிது கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
- பின் மறுபடியும் இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு சட்னியாக அரைத்துக் கொண்டு. பின் அரைத்த சட்னியை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் சிறிய அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கடுகு, இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளுங்கள்.
- பின் நாம் செய்த தாளிப்பை அரைத்து வைத்திருக்கும் சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறுங்கள் அவ்வளவுதான் சுவையான மைசூர் ரோட்டு கடை சட்னி இனிதே தயாராகிவிட்டது.