தந்தூரிக்கு கடையில கிடைக்கிற கிரீன் சட்னி வீட்டிலேயே ஒரு தடவ இப்படி செஞ்சு பாருங்க!

- Advertisement -

நம்ம ஹோட்டலுக்கு போனோம் னா அங்க கிடைக்கிற மெயின் டிஷை விட சைட் டிஷ்ஷா கொடுக்கிற சட்னி சாஸ் மயோனைஸ் இதுதான் ரொம்ப விரும்பி சாப்பிடுவோம். அந்த வகையில் தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன் இதுக்கு சைடு டிஷ்ஷா கொடுக்கிற கிரீன் சட்னி எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஆனா இந்த கிரீன் சட்னி சாப்பிடுவதற்கு நம்ம கடைக்கு தான் போகணும் அப்படின்ற அவசியம் கிடையாது இனிமேல் வீட்ல சிக்கன் எடுத்து தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன் செஞ்சிங்கனா கிரீன் சட்னி வீட்டிலேயே இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க.

-விளம்பரம்-

கண்டிப்பா உங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். கடைகள்ல நான்வெஜ் சாப்பிடறத கொஞ்சம் கொஞ்சமா எல்லாருமே குறைச்சுக்கிட்டு வராங்க காரணம் கெட்டுப்போன சிக்கன் மட்டன் அப்படின்னு கொடுத்து ஒரு சில பேருக்கு ஃபுட் பாய்சன் ஆகிறது. அதனால முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையுமே நம்ம வீட்லயே செஞ்சு சாப்பிடுறது தான் நல்லது. அதுதான் நமக்கு ஆரோக்கியமானதும் கூட. அந்த வகையில வீட்லயே செய்யக்கூடிய இந்த கிரீன் சட்னி கண்டிப்பா உங்களுக்கு கடையில கிடைக்கக்கூடியது மாதிரி இருக்கும்.

- Advertisement -

இந்த கிரீன் சட்னியை தந்தூரி கிரில்லுக்கு மட்டும் யூஸ் பண்ணாம பிரட் ஆம்லெட் போடுறதுக்கும் யூஸ் பண்ணிக்கலாம் டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். ரொம்ப வெயிட் டேஸ்ட்டா இருக்கக்கூடிய இந்த கிரீன் சட்னி செய்வதற்கு குறைவான பொருட்களும் குறைவான நேரமும் மட்டுமே தேவைப்படும். யார் வேணும்னாலும் இந்த கிரீன் சட்னி செய்யலாம் சமைக்கவே தெரியாதவங்க கூட இதை ஈசியா செய்யலாம். இப்ப வாங்க இந்த கிரீன் சட்னியை கடைகள்ல கிடைக்கக்கூடியது மாதிரியே ஈஸியா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
5 from 1 vote

கிரீன் சட்னி | Green Chutney Recipe In Tamil

கிரீன் சட்னியைதந்தூரி கிரில்லுக்கு மட்டும் யூஸ் பண்ணாம பிரட் ஆம்லெட் போடுறதுக்கும் யூஸ் பண்ணிக்கலாம்டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். ரொம்ப வெயிட் டேஸ்ட்டா இருக்கக்கூடிய இந்த கிரீன்சட்னி செய்வதற்கு குறைவான பொருட்களும் குறைவான நேரமும் மட்டுமே தேவைப்படும். யார் வேணும்னாலும்இந்த கிரீன் சட்னி செய்யலாம் சமைக்கவே தெரியாதவங்க கூட இதை ஈசியா செய்யலாம். இப்ப வாங்கஇந்த கிரீன் சட்னியை கடைகள்ல கிடைக்கக்கூடியது மாதிரியே ஈஸியா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: Green chutney
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி அளவு புதினா இலைகள்
  • 1 கைப்பிடி அளவு மல்லி இலைகள்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 கப் தயிர்
  • 1 சிட்டிகை உப்பு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு மிக்ஸி ஜாரில் புதினா இலைகள் மல்லி இலைகள் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு வெங்காயம் சர்க்கரை உப்பு எலுமிச்சை சாறு அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  • அரைத்த விழுதை அடித்து வைத்துள்ள தயிரில் சேர்த்து சிறிது நேரம் நன்றாக கலந்து எடுத்தால் சுவையானகிரீன் சட்னி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 206kcal | Carbohydrates: 67g | Protein: 26g | Sodium: 63mg | Potassium: 320mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : தக்காளி இல்லாமல் சுவையான முருங்கை காய் சட்னி பத்து இட்லி கூட பத்தாது