Home சட்னி சுவையான கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி ?

சுவையான கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி ?

நாம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த கடலை பருப்பு சட்னியை செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : ஓரு வாரம் ஆனாலும் கெடாத கார சட்னி செய்வது எப்படி ?

கண்டிப்பாக இந்த கடலை பருப்பு சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும். ஆகையால் இன்று இந்த கடலை பருப்பு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Print
5 from 1 vote

கடலை பருப்பு சட்னி | Kadali Parupu Chutney Recipe in Tamil

ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த கடலை பருப்பு சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த கடலை பருப்பு சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும். ஆகையால் இன்று இந்த கடலை பருப்பு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: chutney
Cuisine: Indian, TAMIL
Keyword: Kadalai parupu, கடலை பருப்பு
Yield: 4 People
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 tbsp எண்ணெய்
  • 5 tbsp கடலை பருப்பு
  • 1 துண்டு புளி
  • 4 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம் தோல் உரித்தது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 5 சின்ன வெங்காயம்

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் எண்ணெய் நன்கு காய்ந்ததும் 5 டீஸ்பூன் அளவு கடலை பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும் கடலைப்பருப்பு பொன்னிறமாக வந்து நல்ல மனம் வரும் பொழுது கடலைப்பருப்பை தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு அதே கடாயில் ஒரு துண்டு புளி, வரமிளகாய், நான்கு பல் பூண்டு, தோல் உரித்த பத்து சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.
  • அதன் பின் நாம் வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து குளிர வையுங்கள் பின் நாம் முதலில் வறுத்த கடலை பருப்பையும் இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் அளவு கடுகு மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு உளுந்தம் பருப்பு சேர்த்து கொள்ளவும் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் இரண்டு வர மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கி ஐந்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கடாயில் ஊற்றிக் கொள்ளவும். பின் கடாயில் சட்னியை அதிக நேரம் வைக்காமல் சிறிது நேரம் வைத்து விட்டு இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான கடலை பருப்பு சட்னி தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4people | Calories: 60kcal | Carbohydrates: 48g | Protein: 16g | Fat: 2.5g | Saturated Fat: 2.1g | Potassium: 134mg | Fiber: 4.7g

NO COMMENTS

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here