- Advertisement -
உளுந்தில் இருக்கும் புரோட்டின் நம் அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சத்தாகும். தினமும் என்னடா சட்னி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் எந்த காய்கறியை சேர்க்காமல் சட்டென உளுந்து, வெங்காயம், தக்காளி கொண்டு செய்யப்படும் இந்த சட்னி நிச்சயம் அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும். உளுந்தின் மகத்துவம் உணர்ந்த நாம் அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ப்ரோடீன் மிகுந்த இந்த உளுந்து சட்னி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
-விளம்பரம்-
உளுந்து சட்னி | Urad dal Chutney Recipe In Tamil
உளுந்தில் இருக்கும் புரோட்டின் நம் அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சத்தாகும். தினமும் என்னடா சட்னி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் எந்த காய்கறியை சேர்க்காமல் சட்டென உளுந்து, வெங்காயம், தக்காளி கொண்டு செய்யப்படும் இந்த சட்னி நிச்சயம் அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும். உளுந்தின் மகத்துவம் உணர்ந்த நாம் அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ப்ரோடீன் மிகுந்த இந்த உளுந்து சட்னி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
Yield: 4
Calories: 347kcal
தேவையான பொருட்கள்
- கைபிடி அளவு உளுந்து
- 4 காய்ந்த வத்தல்
- 1/2 மூடி தேங்காய்
- 1 ஸ்பூன் சீரகம்
- புளி சிறிது
- உப்பு தேவைக்கு
தாளிக்க
- கடுகு சிறிது
- கறிவேப்பிலை சிறிது
செய்முறை
- முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு உளூந்து போட்டு பொன் வறுவலாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும் துருவிய தேங்காய், வத்தல்,சீரகம் தனியாக வறுத்து எடுக்கவும்
- பிறகு இதனை மிக்ஸியில் போட்டு இதனுடன் புளி உப்பு தண்ணீர் சேர்த்து திக்காக அரைத்து எடுக்கவும்.
- பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும். இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையான உளூந்து சட்னி ரெடி
Nutrition
Serving: 50g | Calories: 347kcal | Carbohydrates: 59.6g | Protein: 24g | Calcium: 154mg | Iron: 3.8mg
- Advertisement -