காலை டிபன் உடன் இப்படி மசால் வடை செஞ்சி கொடுத்து பாருங்க இதன் மொறு மொறு ருசியே தனி தான்!
மசால் வடை தமிழகத்தின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான மாலை நேர சிற்றுண்டி. மசால் வடை இன்றைக்கும் பல பேரின் விருப்பமான உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு மாலை நேரங்களில் சுட சுட மசால் வடையை போட்டு விற்கும் கடைகளில் அலைமோதும் கூட்டம் தான் சாட்சி. மசால்
மசால் வடை தமிழகத்தின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான மாலை நேர சிற்றுண்டி. மசால் வடை இன்றைக்கும் பல பேரின் விருப்பமான உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு மாலை நேரங்களில் சுட சுட மசால் வடையை போட்டு விற்கும் கடைகளில் அலைமோதும் கூட்டம் தான் சாட்சி. மசால் வடையை பொதுவாக மக்கள் தனியாகத்தான் சுவைப்பார்கள் ஆனால் அதை சிலர் சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவும் உண்பார்கள்.
மசால் வடை பார்ப்பதற்கு ஆமை வடிவில் இருப்பதால் இதை ஆமை வடை என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். இதற்கு பருப்பு வடை என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மசால் வடை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலும் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி ஆக இருக்கிறது. காலை உணவில் இட்லி, தோசை, பொங்கலுடன் மெது வடை எவ்வளவு முக்கியமோ அதே போல் மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் மசால் வடை சாப்பிடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம்.
குறிப்பாக அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகள் பலருக்கும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு வெளியில் வடை, பஜ்ஜி போன்ற உணவுகளை வாங்கி தராமல் வீட்டிலேயே சுத்தமான எண்ணெயில் செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய வடையை எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.