காலை டிபன் உடன் இப்படி மசால் வடை‌ செஞ்சி கொடுத்து பாருங்க இதன் மொறு மொறு ருசியே தனி தான்!

- Advertisement -

மசால் வடை தமிழகத்தின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான மாலை நேர சிற்றுண்டி. மசால் வடை இன்றைக்கும் பல பேரின் விருப்பமான உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு மாலை நேரங்களில் சுட சுட மசால் வடையை போட்டு விற்கும் கடைகளில் அலைமோதும் கூட்டம் தான் சாட்சி. மசால் வடையை பொதுவாக மக்கள் தனியாகத்தான் சுவைப்பார்கள் ஆனால் அதை சிலர் சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவும் உண்பார்கள்.

-விளம்பரம்-

மசால் வடை பார்ப்பதற்கு ஆமை வடிவில் இருப்பதால் இதை ஆமை வடை என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். இதற்கு பருப்பு வடை என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மசால் வடை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலும் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி ஆக இருக்கிறது. காலை உணவில் இட்லி, தோசை, பொங்கலுடன் மெது வடை எவ்வளவு முக்கியமோ அதே போல் மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் மசால் வடை சாப்பிடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம்.

- Advertisement -

குறிப்பாக அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகள் பலருக்கும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு வெளியில் வடை, பஜ்ஜி போன்ற உணவுகளை வாங்கி தராமல் வீட்டிலேயே சுத்தமான எண்ணெயில் செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய வடையை எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

Print
3 from 1 vote

மசால் வடை‌ | Masal vadai recipe in tamil

மசால் வடை தமிழகத்தின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான மாலை நேர சிற்றுண்டி. மசால் வடை இன்றைக்கும் பல பேரின் விருப்பமான உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு மாலை நேரங்களில் சுட சுட மசால் வடையை போட்டு விற்கும் கடைகளில் அலைமோதும் கூட்டம் தான் சாட்சி. மசால் வடையை பொதுவாக மக்கள் தனியாகத்தான் சுவைப்பார்கள் ஆனால் அதை சிலர் சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவும் உண்பார்கள். மசால் வடை பார்ப்பதற்கு ஆமை வடிவில் இருப்பதால் இதை ஆமை வடை என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். இதற்கு பருப்பு வடை என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: snacks
Cuisine: Indian
Keyword: masal vadai
Yield: 5 People
Calories: 360kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு                              தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

அரைக்க

  • 3/4 கப் கடலை பருப்பு 
  • 3 பல் பூண்டு
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 துண்டு பட்டை
  • 2 இலவங்கம்

செய்முறை

  • முதலில் கடலைப்பருப்பை நன்கு கழுவி 3 மணி நேரம் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • பின்னர் கடலை பருப்பை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பச்சைமிளகாய், பூண்டு, சோம்பு, பட்டை, இலவங்கம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்த வடையை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான அட்டகாசமான மசால் வடை தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 360kcal | Carbohydrates: 16g | Protein: 30.5g | Fat: 6g | Saturated Fat: 2.9g | Sodium: 420mg | Potassium: 6.1mg | Fiber: 0.6g