Home ஸ்நாக்ஸ் கீரை வைத்து மொறு மொறுனு கீரை கபாப் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி...

கீரை வைத்து மொறு மொறுனு கீரை கபாப் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசிதான்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த ரெஸ்டாரஸ்ட் ஸ்டைல் கீரை கபாப் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

-விளம்பரம்-

உங்களுக்கு வீட்டில் உள்ளோரிடம் பாராட்டை வாங்க வேண்டுமானால், மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது கீரை கபாப் செய்து கொடுங்கள். காய்கறி, கீரை போன்றவையும் ஆரோக்கியத்திற்கு அவசியம் தானே! சொல்வது ஈஸி, சாப்பிடுவதும் சாப்பிட வைப்பதும் சற்று கடினம் தான்.புரிகிறது! அசைவ உணவு பிரியர்கர்களுக்கு மட்டுமே இந்த மனக்கவலை புரியும். உணவை ரசித்து உண்ணும் நீங்கள் பாக்கியசாலிகள். கவலை, துக்கம், சண்டை மற்றும் மன கவலையை விரட்ட எளிய வழி உணவு. சாப்பிட்டாலும் சரி, நமக்கு பிடித்தவர்களுக்கு சமைத்து பரிமாறினாலும் சரி உணவு ஆத்மார்த்தமான மகிழ்ச்சியை கொடுக்கும்.

மனதும், வயிறு நிறைந்தால் கவலை எல்லாம் பறந்தோடி விடும். ஆனால் வாரத்தின் எல்லா நாட்களிலும் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது. கவலையை விடுங்க, இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள கீரை கபாப் ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். இதன் மணமும் சுவையும் நிச்சயமாக அசைவ உணவை விட தரமாக இருக்கும். கடையில் வாங்கி சாப்பிட்ட கபாபை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கீரை கபாப் | Spinach Kebab Recipe In Tamil

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த ரெஸ்டாரஸ்ட் ஸ்டைல் கீரை கபாப் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு வீட்டில் உள்ளோரிடம் பாராட்டை வாங்க வேண்டுமானால், மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது கீரை கபாப் செய்து கொடுங்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Spinach Kebab
Yield: 4 People
Calories: 81kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரைக்கீரை
  • 1 கப் கடலை மாவு
  • 1/2 கப் அரிசி மாவு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் சாட் மசாலா
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 டீஸ்பூன் நறுக்கிய முந்திரி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கீரையை சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து வேகவைத்து நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் மசித்த கீரை, வெங்காயம் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, சாட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி பருப்பு, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  • பின் கையில் லேசா எண்ணெய் தடவி சிறிதளவு மாவு எடுத்து உருண்டைகளாக உருட்டி அதை வடை போல் தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் மாவை ஒவ்வொன்றாக சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கீரை கபாப் தயார். இது தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 81kcal | Carbohydrates: 2.5g | Protein: 8.6g | Fat: 1.8g | Sodium: 79mg | Potassium: 167mg | Fiber: 6g | Vitamin A: 93IU | Vitamin C: 77mg | Calcium: 29mg | Iron: 7mg

இதனையும் படியுங்கள் : வாரத்துக்கு ஒரு முறை வல்லாரை கீரை கூட்டு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க ஞாபக சக்தி இரண்டு மடங்காகும்!