Home சைவம் வாரத்துக்கு ஒரு முறை வல்லாரை கீரை கூட்டு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க ஞாபக சக்தி...

வாரத்துக்கு ஒரு முறை வல்லாரை கீரை கூட்டு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க ஞாபக சக்தி இரண்டு மடங்காகும்!

இப்ப இருக்கிற நிறைய குழந்தைகளுக்கு ஞாபக திறனும் நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாம இருக்கும் அவங்க எல்லாருக்குமே கீரைகள் கொடுத்தா ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் அவங்களோட அன்றாட உணவில் ஏதாவது ஒரு கீரை சாப்பிட்டால் அவங்க உடல் ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும் அதோட நோய் எதிர்ப்பு சக்தி நல்லா கிடைக்கும்.

-விளம்பரம்-

நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் இல்லாம உடம்புக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கும் முக்கியமாக இரும்பு சத்து நிறையவே கிடைக்கும் அரைக்கீரை பொன்னாங்கண்ணி கீரை சிறுகீரை மிளகு தக்காளி கீரை பாலக்கீரை அப்படின்னு நிறைய கீரைகள் இருக்கு இந்த கீரையில் எந்த கீரை சாப்பிட்டாலும் நம் உடம்புக்கு ரொம்பவே நல்லது ஆனா அது எல்லாத்தையும் விட வல்லாரைக்கீரை சாப்பிட்டால் நம்ம ஞாபக சக்தி ரொம்பவே அதிகரிக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கிறதோட இந்த கீரையோட டேஸ்டும் ரொம்பவே சூப்பரா இருக்கும்.

நீங்க இந்த வல்லாரைக் கிடைக்க பலவிதத்தில் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இப்ப நம்ம சொல்ல போற மாதிரி இந்த வல்லாரை கீரை கூட்டு செஞ்சு பாருங்க புளி குழம்புக்கு சைடிஷா வைத்து சாப்பிட்டால் ரொம்பவே அருமையா இருக்கும் அது மட்டுமில்லாமல் சுடு சாதத்தில் போட்டு இந்த கீரைகளை பிசைஞ்சு சாப்பிட்டா டேஸ்ட் நீங்க நினைக்கிறது விட ரொம்ப சூப்பரா இருக்கும். கீரை சாப்பிட மாட்டோம் என்று அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கூட இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா ரொம்ப போய் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான வல்லாரைக் கீரை கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
3.50 from 2 votes

வல்லாரைக் கீரை கூட்டு | Vallaarai Keerai Kootu In Tamil

நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் இல்லாம உடம்புக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கும் முக்கியமாக இரும்புசத்து நிறையவே கிடைக்கும் அரைக்கீரை பொன்னாங்கண்ணி கீரை சிறுகீரை மிளகு தக்காளி கீரைபாலக்கீரை அப்படின்னு நிறைய கீரைகள் இருக்கு இந்த கீரையில் எந்த கீரை சாப்பிட்டாலும்நம் உடம்புக்கு ரொம்பவே நல்லது ஆனா அது எல்லாத்தையும் விட வல்லாரைக்கீரை சாப்பிட்டால்நம்ம ஞாபக சக்தி ரொம்பவே அதிகரிக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கிறதோட இந்த கீரையோட டேஸ்டும்ரொம்பவே சூப்பரா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Vallarai Keerai Kootu
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கட்டு வல்லாரை கீரை
  • 50 கிராம் பாசிப் பருப்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 மிளகாய் வத்தல்
  • 5 பல் பூண்டு
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • நெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • வல்லாரை கீரையை சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சீரகம், பூண்டு மிளகாய் வத்தல் அனைத்தையும் சேர்த்து நன்றாகஅரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை போட்டு வேக வைக்கவும்.
  • பாசிப்பருப்பு பாதியளவு வெந்தவுடன் கீரை சேர்த்து இரண்டையும் வேக வைக்கவும்
  •  
    இரண்டும் ஓரளவு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது மஞ்சள் தூள் நறுக்கிய வெங்காயம் தக்காளிஉப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து கீரையுடன் சேர்த்தால்சுவையான வல்லாரைக் கீரை கூட்டு தயார்

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Iron: 0.26mg