இனி காபி மற்றும் டீக்கு பதிலாக இந்த மசாலா பால் செய்து குடித்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!
மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடித்து போர் அடித்துவிட்டதா? தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், சூடாகவும், சத்தாகவும் குடிக்க பலருக்கும் ஆசை இருக்கும். நீங்கள் அப்படியொரு பானத்தைக் குடிக்க விரும்பினால், மசாலா பால் குடியுங்கள். இந்த மசாலா பால் நட்ஸ்கள் மற்றும் மசாலா பொருட
மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடித்து போர் அடித்துவிட்டதா? தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், சூடாகவும், சத்தாகவும் குடிக்க பலருக்கும் ஆசை இருக்கும். நீங்கள் அப்படியொரு பானத்தைக் குடிக்க விரும்பினால், மசாலா பால் குடியுங்கள். இந்த மசாலா பால் நட்ஸ்கள் மற்றும் மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பானம் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி குடிக்குமாறு இருக்கும்.
உங்களுக்கு மசாலா பால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். மசாலா பால் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு பானம். இது மாலை நேரங்களில் தேநீர் மற்றும் காபிக்கு மாற்றாக அருந்தக் கூடிய பானமாக இருக்கிறது. இன்று இந்தியாவில் இவை கிடைக்காத காபி மற்றும் டீ ஷாப்புகளே கிடையாது எனும் அளவிற்கு மசாலா பாலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
தமிழில் மசாலா பால் என்று அழைக்கப்படும் இவை வட இந்திய மாநிலங்களில் ஹிந்தியில் மசாலா சாய் என்று அழைக்கப்படுகிறது. மசாலா சாய்க்கு என்று அங்கு ஒரு தனி மவுசு உண்டு. இந்தியாவில் உதயமான இவை மெல்ல மெல்ல இந்தியர்கள் குடிபெயர்ந்த நாடுகளிலும் பிரபலமடைந்து விட்டது. மசாலா பாலில் இஞ்சி, பட்டை, ஏலக்காய், மஞ்சள் தூள், மற்றும் கிராம்பு சேர்ப்பதனால் இவை சாதா பால் மற்றும் காபியை விட உடம்புக்கு மிகவும் நல்லது. இதை இரவு நேரங்களில் பருகினால் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் கூட நன்கு தூங்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனையும் படியுங்கள் : டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!