டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

- Advertisement -

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன் வீட்டில் ஆண்கள் அம்மா சாப்பாடு போடுங்க என்ற வார்த்தைக்கு அடுத்து ஆண்கள் அதிகமாக செல்லும் வார்த்தை அண்ணா ஒரு டீ போடுங்க அந்த அளவிற்கு ஒரு டீயை குடித்து விட்டு அவர்கள் வேலைகளை சரிவர செய்து கொண்டிருப்பார்கள்.

-விளம்பரம்-

டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது. சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் இன்று நாம் சுவையாகவும், மணமாகவும் இருக்கும் மசாலா டீ பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

இந்த மசாலா டீயை நீங்கள் உங்கள் வீட்டில் போட்டு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் அடுத்த முறையும் உங்களை இதையே அடிக்கடி போட சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று மசாலா டீ எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்ஙள்.

Print
4 from 4 votes

மசாலா டீ | Masala Tea Recipe in Tamil

டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது.சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் இன்று நாம் சுவையாகவும், மணமாகவும் இருக்கும் மசாலா டீ பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த மசாலா டீயை நீங்கள் உங்கள் வீட்டில் போட்டு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் அடுத்த முறையும் உங்களை இதையே அடிக்கடி போட சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Drinks
Cuisine: Indian, TAMIL
Keyword: Masala Tea, மசாலா டீ
Yield: 4 People
Calories: 43kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 டீ பாத்திரம்

தேவையான பொருட்கள்

மசாலா பொடி செய்ய

  • 1 tbsp கிராம்பு
  • ½ அளவு ஜாதிக்காய்
  • 2 பட்டை
  • 25 கிராம் சுக்கு
  • 1 tbsp ஏலக்காய்
  • 1 tbsp மிளகு

டீ போடா

  • 2 டம்பளர் தண்ணீர்
  • 1 tbsp பொடி செய்த மசாலா
  • 4 டீ தூள்
  • 5 tbsp சர்க்கரை
  • 2 டம்பளர் பால்

செய்முறை

  • முதலில் ஒரு டீஸ்பூன் கிராம்பு, இரண்டு பட்டை, பாதி அளவு ஜாதிக்காய், ஒரு டீஸ்பூன் ஏலக்காய், ஒரு டீஸ்பூன் மிளகு இந்த பொருட்களை எல்லாம் ஒரு கடாயில் சேர்த்து கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு நாம் வறுத்த பொருட்களுடன் 25 கிராம் அளவு சுக்கு சேர்த்து ஒரு உரலில் சேர்த்து நன்றாக தட்டி அதன்பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு டீ பாத்திதரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, நான்கு டீஸ்பூன் அளவு டீ தூள் மற்றும் நாம் வறுத்து பொடி செய்த மசாலாவில் ஒரு டீஸ்பூன் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
  • பின் தண்ணீர் நன்றாக கொதித்து வரும் பொழுது ஐந்து டீஸ்பூன் அளவு சர்க்கரை மற்றும் இரண்டு டம்ளர் அளவு பால் சேர்த்து கொதிக்க விட்டு கொள்ளுங்கள்.
  • பின் டீ நன்றாக கொதித்து வரும் பொழுது தீயை குறைத்து வைத்து ஒரு இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள். பின்பு டீ யை வடிகட்டி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாற கொடுங்கள் அவ்வளவு தான் சுவையான மசாலா டீ தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 500gram | Calories: 43kcal | Protein: 11g | Saturated Fat: 0.2g | Cholesterol: 1mg | Sodium: 2mg | Potassium: 40mg | Fiber: 1g | Sugar: 4g | Iron: 2.1mg

இதையும் படியுங்கள் : சுவையான குளு குளு லஸ்ஸி செய்வது எப்படி ?

1 COMMENT

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here