நீங்கள் வெயில் காலங்களில் அல்லது சாதாரண நாட்களில் தாகத்திற்காக கடைஙளில் வாங்கி குடிக்கும் பிளேவேர்டு குளிர்பானங்கள் மற்றும் கேஸ் அதிகம் நிறைந்த குளிர்பானங்களை வாங்கி குடிப்பதற்கு பதிலாக இதுபோன்று இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து குளிர்பானங்கள் செய்து குடிக்கலாம். ஆம் இன்று பக்குவமான முறையில் சுவையான குளு குளு லஸ்ஸி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக தயிரில் சீனி கலந்து அது லஸ்ஸி என்று சாப்பிடவும்.
இதையும் படியுங்கள் : சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி ?
ஆனால் அந்த லஸ்ஸியை இன்னும் எப்படி சுவையானதாக மாற்ற முடியும் என்பதை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம். இதேபோல் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் விரும்பி வருவார்கள் குறிப்பாக குழந்தைகள் மேலும் கேட்டு வாங்கி குடிப்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று சுவையான குளு குளு லஸ்ஸி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சுவையான லஸ்ஸி | Tasty Lassi Recipe in Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
- 1 மத்து
- 2 டம்பளர்
தேவையான பொருட்கள்
- 400 ML தயிர் புளிக்காதது
- 3 tbsp சர்க்கரை
- 2 சிட்டிகை ஏலக்காய் தூள்
- 4 tbsp பால்கோவா
- 5 முந்திரி பருப்பு உடைத்தது
செய்முறை
- முதலில் நாம் எடுத்துக் கொண்ட 400 Ml புளிக்காத தயிரையும் ஒரு கப் அளவிலான தண்ணீரையும் ஒரு இரண்டு மணி நேரங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர் வைத்துக் கொள்ளுங்கள்.
- அதன் பின்பு நாம் குளிர வைத்த தயிரை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனை மத்து வைத்து நன்றாக கடைந்து எடுத்துக் கொள்ளுங்கள். தயிரை நன்றாக கடைத்ததும் அதனுடன் மூன்று டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
- பின் மறுபடியும் சர்க்கரை கரையும் வரை மத்து வைத்நு கடைந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் இரண்டு சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் மற்றும் அரைக்கப் அளவு தண்ணீர் சேர்த்து மறுபடியும் நன்றாக கடைந்து எடுங்கள்.
- தண்ணீர் அதிகமாக சேர்த்து விடாதீர்கள் மோர் ஆகிவிடும். பின் கடைந்து எடுத்த லஸ்ஸியை இரு டம்ளரில் ஊற்றிக் கொண்டு இரு டம்ளரிலும் இரண்டு டீஸ்பூன் அளவு பால்கோவா சேர்த்து அதன் மேல் உடைத்த முந்திரி பருப்புகளை தூவி விடவும். அவ்வளவு தான் குளு குளு லஸ்ஸி இனிதே தயாராகிவிட்டது.