இந்த வெயிலுக்கு குளு குளுன்னு மின்ட் லஸி செஞ்சு குடிச்ச பாருங்க!

- Advertisement -

இந்த வெயிலுக்கு தயிர் மோர் ஜில்லுனு ஜூஸ் இதுதான் ரொம்ப பிடிக்கும். அதுலயும் ரொம்பவே இயற்கையா கிடைக்கக்கூடிய இளநீர் மோர் இதெல்லாம் குடிச்சா இந்த வெயிலுக்கு உடம்புல சூடு பிடிக்காமல் இருக்கும். வெயில் நாள வர பல பிரச்சனைகளுக்கு இந்த மோர் குடிக்கிறது ரொம்பவே நல்லது அந்த வகையில் எப்பவுமே ஒரே மாதிரியா மோர் தயிர்னு சாப்பிடுறதுக்கும் குடிப்பதற்கும் போர் அடிச்சது.

-விளம்பரம்-

இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய மின்ட் லஸ்ஸி செஞ்சு குடிச்சு கண்டிப்பா குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு வந்துட்டா கூட இந்த போட்டு கொடுங்க கண்டிப்பா விரும்பி குடிப்பாங்க. இந்த லசி செய்றதுக்கு ரொம்ப பெரிய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது கெட்டியான தயிர் தான் இதுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.

- Advertisement -

 மிக்ஸி ஜார்ல எல்லாத்தையும் சேர்த்து நல்லா நுரைக்க நுரைக்க அடிச்சு ஒரு டம்ளரில் கொடுத்து பரிமாறினா குடிக்கிறதுக்கு ரொம்பவே இதமா புத்துணர்ச்சியா உடம்புக்கும் ரொம்ப ஆரோக்கியமானதா இருக்கும். கடையில தான் எல்லாரும் லஸ்ஸி குடிச்சிருப்போம் ஆனா இனிமேல் லஸ்ஸி குடிக்கிறதுக்கு கடைக்கு போக வேண்டிய அவசியமே கிடையாது வீட்டிலேயே சூப்பரா இந்த லஸ்ஸி செஞ்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான சூப்பரான லஸ்ஸி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

மின்ட் லஸி | Mint Lassi Recipe In Tamil

ஒரு தடவை சூப்பரான புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய மின்ட் லஸ்ஸி செஞ்சு குடிச்சு கண்டிப்பா குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு வந்துட்டா கூட இந்த போட்டு கொடுங்க கண்டிப்பா விரும்பி குடிப்பாங்க. இந்த லசி செய்றதுக்கு ரொம்ப பெரிய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது கெட்டியான தயிர் தான் இதுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.கடையில தான் எல்லாரும் லஸ்ஸி குடிச்சிருப்போம் ஆனா இனிமேல் லஸ்ஸி குடிக்கிறதுக்கு கடைக்கு போக வேண்டிய அவசியமே கிடையாது வீட்டிலேயே சூப்பரா இந்த லஸ்ஸி செஞ்சிடலாம்.
Prep Time10 minutes
Course: juice
Cuisine: tamil nadu
Keyword: Mint Lassi
Yield: 4
Calories: 306kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • புதினா இலைகள் சிறிதளவு
  • 1 கப் கெட்டியான தயிர்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/4 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1 சிட்டிகை உப்பு

செய்முறை

  • புதினாவை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  • சீரகத்தை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்
  • மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிர் சீரகத்தூள் உப்பு சர்க்கரை புதினா இலைகள் அனைத்தையும் சேர்த்து நுரை பொங்க அடித்து எடுக்கவும்.
  • ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரைத்து அடித்த தயிர் கலவையை சேர்த்தால் சுவையான மீன் லஸ்ஸி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Sodium: 11.7mg | Fiber: 3g

இதையும் படியுங்கள் : வீடே மணக்கும் படி ‘புதினா புலாவ்’ இனி இப்படி செஞ்சி பாருங்க இனி நீங்களே வீட்டில் அடிக்கடி செய்வீங்க!