வீடே மணக்கும் படி ‘புதினா புலாவ்’ இனி இப்படி செஞ்சி பாருங்க இனி நீங்களே வீட்டில் அடிக்கடி செய்வீங்க!

- Advertisement -

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

-விளம்பரம்-

இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன. புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் புதினா புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது.

- Advertisement -

புதினா நறுமனத்திற்கு மட்டும் சேர்த்து கொள்ளமால் அதை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக கோடையில் வெப்பநிலை உயராமல் உங்கள் உடலைப் பாதுகாக்க இது பயன் உள்ளதாக இருக்கும். மேலும் பிஸியான மற்றும் அதிக காலை அவசர நேரங்களில் இதை நீங்கள் விரைவாக செய்து விடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

Print
1.67 from 3 votes

புதினா புலாவ் | Mint Pulav Recipe In Tamil

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். புதினா நறுமனத்திற்கு மட்டும் சேர்த்து கொள்ளமால் அதை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக கோடையில் வெப்பநிலை உயராமல் உங்கள் உடலைப் பாதுகாக்க இது பயன் உள்ளதாக இருக்கும். மேலும் பிஸியான மற்றும் அதிக காலை அவசர நேரங்களில் இதை நீங்கள் விரைவாக செய்து விடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Pudhina Pulav
Yield: 4
Calories: 207kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 டம்ளர் அரிசி
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  • 1/4 கப் தயிர்

அரைக்க

  • 1 1/2 கப் புதினா
  • 1 1/2 கப் மல்லி இலை
  • 6 1 1/2 பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பச்சை மிளகாய்

தாளிக்க

  • 1 பட்டை
  • 1 லவங்கம்
  • 1 அன்னாசிபூ
  • 2 ஏலக்காய்
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு

செய்முறை

  •  
    பின்னர் புதினா மற்றும் மல்லி இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய், புதினா, மல்லி இலை ,இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி பட்டை,‌ சோம்பு, லவங்கம், அன்னாசிபூ, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
     
  • பின்னர் தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுது, காஷ்மீர் மிளகாய்த்தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • சிறிது நேரம் கழித்து அரிசியை சேர்த்து  நன்குகலந்து விடவும். அதன்பின் ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும்.
  • பின்னர் குக்கரில் 3 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான புதினா புலாவ் தயார்.       

Nutrition

Serving: 100g | Calories: 207kcal | Carbohydrates: 37.7g | Protein: 4.8g | Fat: 4g | Fiber: 4.1g | Calcium: 115mg | Iron: 2.4mg