பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நம்முடைய அன்றாட உணவுகளுடன் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒரு பழம் தான் பப்பாளி.
இது கலோரிகளில் குறைவாக இருப்பதைத் தவிர நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவும். பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
பப்பாளி ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்தை குறைக்கும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
அதிலும் அதனை ஜூஸ் அல்லது மில்க் ஷேக் போன்று செய்தால், குழந்தைகளும் விரும்பி குடிப்பார்கள். மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையான இந்த பப்பாளி மில்க் ஷேக் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
பப்பாளி நட்ஸ் மில்க் ஷேக் | Papaya Nuts Milk Shake Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 கண்ணாடி டம்ளர்
தேவையான பொருட்கள்
- 1 பப்பாளி பழம்
- 3 டேபிள் ஸ்பூன் தேன்
- 2 டேபிள் ஸ்பூன் கன்டென்ஸ்டு மில்க்
- 1 டேபிள் ஸ்பூன் பாதாம்
- 1 டேபிள் ஸ்பூன் பிஸ்தா
செய்முறை
- முதலில் பப்பாளிப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- பின்னர் மிக்ஸி ஜாரில் பப்பாளி துண்டுகள், பாதாம், பிஸ்தா, தேன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மறுமுறை அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி ஐஸ் கட்டிகள் போட்டு அதன் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து கொள்ளவும்.
- மேலும் கொஞ்சம் தேன், துருவிய கேரட் சேர்த்து அலங்கரித்தால் மிகவும் சுவையான பப்பாளி மில்க் ஷேக் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த தேன் மிட்டாய் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள் நாவில் எச்சி ஊறும்!