மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும் மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதோடு இந்த சீசனில் மாம்பழம் ஏராளமானோர் அதிகம் வாங்கி சாப்பிடும் பழமாகவும் இருக்கும். நீங்கள் மாம்பழத்தை எப்போதும் அப்படியே சாப்பிடுவீர்களா? அப்படியானால் சற்று வித்தியாசமாக அதைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடியுங்கள்.
இந்த மாம்பழ மில்க் ஷேக் கொளுத்தும் வெயிலில் குடிப்பதற்கு சற்று இதமாக இருக்கும். முக்கனிகளான ஒன்றான மாம்பழத்திற்கு தனி இடம் உண்டு. கோடை மாதங்களில் அதிகமாக கிடைக்கும் இந்த அற்புத பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதன் பழுத்த கனிகளை அப்படியே உண்ணலாம். ஜூஸாகவும் பருகி வரலாம். மாம்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ உள்ளன.
மேலும், இவை 25 வகையான கரோட்டினாய்டுகளும் உள்ளடங்கி இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அந்த மாம்பழத்தைக் கொண்டு மாலை வேளையில் அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான இந்த மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.
மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் | Mango Custard Milk Shake Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கண்ணாடி டம்ளர்
தேவையான பொருட்கள்
- 2 மாம்பழம்
- 1/2 கப் சர்க்கரை
- 1/4 கப் கஸ்டர்டு பவுடர்
- 2 கப் பால்
- 2 டீஸ்பூன் தேன்
- 1 டீஸ்பூன் சப்ஜா விதை
- 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
- 1/4 கப் ஐஸ்கிரீம்
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- நறுக்கிய முந்திரி, பாதாம் தேவையான அளவு
செய்முறை
- முதலில் மாம்பழத்தை நன்கு கழுவி விட்டு தோல் மற்றும் விதை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள், கஸ்டர்டு பவுடர் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழம், சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- பின் காய்ச்சி ஆற வைத்த பால், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின் இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி ஐஸ் கட்டிகள், சப்ஜா விதைகள் சேர்த்து அதன் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி, ஐஸ்கிரீம் சேர்த்து கொள்ளவும்.
- டம்ளரின் மேல் சிறிதளவு பொடியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள் சேர்த்து அலங்கரித்து பிறகு பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான, சத்தான மாம்பழ கஸ்டர்ட் மில்க் ஷேக் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இந்த வெயிலுக்கு குளு குளுன்னு மின்ட் லஸி செஞ்சு குடிச்ச பாருங்க!