அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே அதிக குளிர்ச்சியுடைய பாதாம் பிசின் இளநீர் சியா விதைகள் இதெல்லாம் சேர்த்து ஒரு சூப்பரான இந்த வெயிலுக்கு ஏற்ற இளநீர் சர்பத் தான் நம்ம எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.
பொதுவா சர்பத் ஜூஸ் ஐஸ்கிரீம் ஏதாவது நமக்கு சாப்பிடணும் போல இருந்துச்சு அப்படின்னா நம்ம கடைகளில் தான் போய் சாப்பிடுவோம் ஆனா இனிமேல் உங்களுக்கு இந்த மாதிரி குளுகுளுன்னு ஏதாவது குடிக்கணும் அப்படின்னு தோணுச்சுன்னா அதுக்காக நீங்க கடைகள்ல போய் குடிக்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது வீட்டிலேயே சூப்பரா இளநீர் சர்பத் போட்டு ஆரோக்கியமான முறையில் குடிக்கலாம்.
இந்த இளநீர் சர்பத்துல நம்ம பாதாம் பிசின் சியா விதிகள் எல்லாம் நேசிக்கிறதால நம்ம உடம்புக்கு அவ்வளவு குளிர்ச்சியா இருக்கும் ஐஸ் கட்டிகள் ஐஸ் தண்ணீர் இதெல்லாம் குடிச்சு நம்ம உடம்ப குளிர்ச்சியாக வைக்கிறத விட்டுட்டு இந்த மாதிரி இயற்கையாகவே குளிர்ச்சியுடைய பாதாம் பிசின் ,சியா விதைகள் எல்லாம் சேர்த்து இந்த மாதிரி ஏதாவது ஜூஸோ இல்ல சர்பத்தோ போட்டு குடிச்சு பாருங்க உங்க உடல் சூடு எல்லாமே தணிஞ்சு போயிடும்.
அதவிட ஒரு சூப்பரான குளிர்ச்சியான விஷயங்கள் கிடையவே கிடையாது. அதனால நீங்க உடம்ப குளிர்ச்சியாகணும் அப்படின்னு நினைச்சா இந்த மாதிரி சூப்பரான இளநீர் சர்பத் போட்டு குடிச்சு பாருங்க இதோட ருசியும் சொல்லவே தேவையில்லை ரொம்ப சூப்பரா இருக்கும். இதுல இளநீர் சேர்க்கிறதால வயிற்றுக்கு ரொம்ப குளிர்ச்சியா வயிறு வலி போன்ற பிரச்சனைகள் கூட சரியாகும். இப்ப வாங்க இந்த சூப்பரான செம டேஸ்டான இளநீர் சர்பத் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இளநீர் சர்பத் | Tender Coconut Sarbath Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 டம்ளர் இளநீர்
- 1/2 டம்ளர் சர்பத்
- 1 டீஸ்பூன் சியா விதைகள்
- 3 பாதாம் பிசின்
செய்முறை
- பாதாம் பிசினை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்
- சியா விதைகளை பத்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்
- ஒரு பெரிய டம்ளரில் ஊற வைத்த பாதாம்பிசின் சர்பத் வடிகட்டிய இளநீர் சியா விதைகள் சேர்த்து பரிமாறினால் சுவையான இளநீர் சர்பத் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : வெயிலுக்கு ஏற்ற ஒரு இதமான சுவையான புதினா ஜூஸ் ஒரு தரம் இப்படி செஞ்சு பாருங்க!