- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 2
- Cuisine
- Indian
- Course
- Drinks
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை தினமும் செய்து கொடுப்பீர்களா? இன்று அவர்களுக்கு மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? தற்போது மாம்பழ சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிகம் காண நேரிடும். அந்த மாம்பழத்தைக் கொண்டு மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.
பழங்கள் விஷயத்தில் இது ஆரோக்கியம் என்று தெரிந்தாலும் இதை பலரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. இருப்பினும் பழத்தையும் வெறுப்பதில்லை. பழத்தை சாப்பிட பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் இதை ஜூஸ் அல்லது மில்க் ஷேக் செய்து குடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மில்க் ஷேக் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம். பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது.
அதே நேரம் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு இரண்டுக்கும் இந்த பழம் நல்ல உதவும். மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக், சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் மாம்பழம் மற்றும் மாதுளை வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக இந்த மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் செவ்வாழை பழம் மில்க் ஷேக் சுலபமாக இப்படி செஞ்சி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் மாம்பழத்தை நன்கு கழுவி விட்டு, தோல் சீவி, விதையை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழம் மாதுளை, சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் காய்ச்சி ஆற வைத்த பால், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி ஐஸ் கட்டிகள், சப்ஜா விதைகள் சேர்த்து அதன் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து கொள்ளவும்.
டம்ளரின் மேல் சிறிதளவு பொடியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள், மாதுளை முத்துக்கள் சேர்த்து அலங்கரித்து பிறகு பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான, சத்தான மாம்பழ மாதுளை மில்க் ஷேக் தயார்.






