Home ஸ்வீட்ஸ் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த தேன் மிட்டாய் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள் நாவில் எச்சி ஊறும்!

90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த தேன் மிட்டாய் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள் நாவில் எச்சி ஊறும்!

இப்பதான் பீட்சா, பர்கர் ரோல், விதவிதமான சாக்லேட்டுகள் னு நிறைய தின்பண்டங்கள் வந்துருச்சு. ஆனா 90ஸ்ல பெட்டி கடைகளில் இருக்கக்கூடிய தின்பண்டங்கள் இப்போ நினைச்சாலும் சாப்பிடணும்னு தோணும் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். தேன் மிட்டாய் கடலை மிட்டாய் எள் மிட்டாய், மம்மி டாடி, காசு மிட்டாய், இலந்தை பழம், னு 90ஸ் கிட்ஸோட பேவரட்டான தின்பண்டங்கள் ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.

-விளம்பரம்-

ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கூட அருமையான சுவையில கிடைக்கக்கூடிய இந்த தின்பண்டங்கள் எல்லாமே இப்பவும் கூட ஏதோ ஒரு மூலையில் பெட்டிக்கடைகளில் விற்கப்பட்டுட்டு தா இருக்கு. ஆனா இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு அதை பத்தி தெரியாது. 90ஸ் கிட்ஸ் ஓட மெமரீஸ் ல ஒண்ணா இருக்க திண்பண்டங்கள் பேவரட் ஆக இருக்க தேன் மிட்டாய் கடைகளில் தான் டேஸ்ட்டா இருக்கும்னு சொல்லுவாங்க.

ஆனா வீட்டிலேயே சூப்பரான டேஸ்ட்ல இந்த தேன் மிட்டாய் நம்ம செஞ்சிடலாம். அது உன் ரொம்ப சுலபமான முறையிலேயே செய்யலாம். இப்ப இருக்க குழந்தைகளுக்கும் இந்த மாதிரியான தின்பண்டங்களை வீட்டிலேயே செஞ்சு கொடுங்க அவங்களும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த தேன் மிட்டாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 2 votes

தேன் மிட்டாய் | Thean Mittai Recipe In Tamil

ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கூட அருமையான சுவையில கிடைக்கக்கூடிய இந்த தின்பண்டங்கள் எல்லாமே இப்பவும் கூட ஏதோ ஒரு மூலையில் பெட்டிக்கடைகளில் விற்கப்பட்டுட்டு தா இருக்கு. ஆனா இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு அதை பத்தி தெரியாது. 90ஸ் கிட்ஸ் ஓட மெமரீஸ் ல ஒண்ணா இருக்க திண்பண்டங்கள் பேவரட் ஆக இருக்க தேன் மிட்டாய் கடைகளில் தான் டேஸ்ட்டா இருக்கும்னு சொல்லுவாங்க. இப்ப இருக்க குழந்தைகளுக்கும் இந்த மாதிரியான தின்பண்டங்களை வீட்டிலேயே செஞ்சு கொடுங்க அவங்களும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த தேன் மிட்டாய் எப்படி செய்வது என்றுபார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Thean Mittai
Yield: 4
Calories: 135kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் அரிசி மாவு
  • 1/2 கப் மைதா மாவு
  • 2 கப் உளுந்து
  • 1 1/2 கப் சர்க்கரை
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதில் மைதா மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப உப்பும் சேர்த்து தேவைப்பட்டால் ஃபுட் கலர் கலந்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, கலந்து வைத்துள்ள மாவிலை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும்.பொறித்த உருண்டைகளை கொதிக்க வைத்துள்ள சர்க்கரை கரைசலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
  • அறிவினை நேரம் கழித்து பார்த்தால் அந்த உருண்டைகள் எல்லாம் சர்க்கரை கரைசலில் ஊறி பார்ப்பதற்கே நாவல் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ஒரு சுவையான தேன் மிட்டாய் தயாராக இருக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 135kcal | Carbohydrates: 52g | Protein: 2g | Sodium: 19mg | Potassium: 281mg | Sugar: 2g

இதையும் படியுங்கள் : 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த (25பைசா) கமர்கட்டு மிட்டாய் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! மிட்டாய்னா இதான்யா மிட்டாய்!