- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 2
- Cuisine
- Indian
- Course
- sweets
எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது விசேஷ நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக மாற்றி விடும். அதுவும் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் பழங்களில் தயாரிக்கப்பட்ட இனிப்பாக இருந்தால் தயக்கமே இல்லாமல் ஒரு பிடி பிடித்து விடுவீர்கள். அப்படி சிறந்த நன்மை வாய்ந்த அத்திப்பழம் மற்றும் உலர்ந்த பழ வகைகள், நெய் கொண்டு தயாரிக்கப்படும் அருமையான சுவையான இனிப்பு வகை தான் அத்திப்பழ கீர். கீர் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு வகையாகும்.
கீர்ரில் கேரட் கீர், கோதுமை கீர், ரவை கீர் போன்ற பல வகையான கீர் வகைகள் உள்ளது. மற்ற பழங்களைக் காட்டிலும் அதிக மருத்துவ குணம் கொண்ட அத்திப்பழத்தை பயன்படுத்தி இனிப்பான கீர் செய்வது பற்றி பார்க்கலாம். பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்ட, அத்திப்பழம் சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல், கண்களின் பார்வை குறைபாடு, இரத்தச் சோகை போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.
மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எனர்ஜி பானமாக, வீட்டில் உலர்ந்த அத்திப்பழம் இருந்தால், அதனைக் கொண்டு கீர் செய்து கொடுங்கள். இதனால் அவர்களுக்கு எனர்ஜி கிடைப்பதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மேலும் இந்த கீர் அவர்கள் விரும்பி குடிக்குமாறு இருக்கும். கடைகளில் இனி வாங்குவதை விட்டுவிட்டு வீட்டிலே உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அத்திப்பழ கீர் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ருசியான பேரிச்சை லட்டு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு லட்டு கூட மிஞ்சாது!
Ingredients
Method
முதலில் அத்தி பழம், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ளவும்.
பின் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அத்திப்பழம், முந்திரி, பாதாம் விழுதை சேர்த்து சிறிது நேரம் கலந்து விடவும்.
பின்னர் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து சிறு தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.
அதன்பிறகு ஒரு கொதி வந்தவுடன் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் பால் பவுடரை கட்டியில்லாமல் சேர்த்து கைவிடாமல் கலந்து விடவும்.
பால் நன்கு சுண்டியதும் நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு, இறுதியாக ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான அத்திப்பழம் கீர் தயார்.






