- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- sweets
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த கேரட் கீர் ரெசிபி உங்களுக்கு தான்! கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இது பாயாசம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கேரட் கீர் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான கேரட் கீர் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது. கேரட் கீர் கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான கீர் ஆகும். கீர் ரெசிபிகள் பல இந்தியர்களுக்கு பிடித்த சமையல் என்பதால், கேரட் கீர் அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக உள்ளது. எப்பொழுதும் டீ காபி பால் கூல் ட்ரிங்ஸ் ஜூஸ் என ஒரே மாதிரியாக குடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய இந்த கேரட் கீர்ரை நாம் செய்து குடிக்கலாம்.
இந்த சுவையான ரெசிபி வீட்டில் நடைபெறும் பல்வேறு விசேஷங்களுக்கு தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் A உள்ளதால் இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த சுவையான கேரட் கீர் ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்கவும். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு பாதாம் கீர் கொடுத்தால், அவர்களின் பசி அடங்குவதோடு, உடலுக்கு சத்தானதும் கூட. இனி இந்த கேரட் கீர் கடைகளில் சென்று வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!
Ingredients
Method
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் உற்றி பால் பாதியளவு வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரில் கேரட், பாதாம், முந்திரி, நெய், ஏலக்காய் சேர்த்து இவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வேக வைத்த கேரட், முந்திரி, பாதாம் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ச்சிய பாலை சேர்த்து அதனுடன் சர்க்கரை, அரைத்த கேரட் விழுது சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும். விருப்பப்பட்டால் குங்குமப்பூ சேர்த்து கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான கேரட் கீர் தயார். இதை சூடாகவும், பிரிட்ஜில் குளிர வைத்தும் சாப்பிடலாம்.






