90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த (25பைசா) கமர்கட்டு மிட்டாய் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! மிட்டாய்னா இதான்யா மிட்டாய்!

- Advertisement -

90ஸ் கிட்சுகளின் மனசுக்கு மிகவும் பிடித்த பள்ளிகூட பெட்டி கடை கமர்கட்டு மிட்டாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம். கமர்கட்டு  மிட்டாய காக்கா கடி கடிக்க முடியாம கஷ்டப்பட்டு அந்த பல்லுக்கு தெரியும் அதனுடைய சுவை எப்படி இருக்கும் அப்படின்னு. இந்த கமர்கட்டு மிட்டாய் செய்வதற்கு இரண்டு பொருட்கள் தான் தேவை. இந்த இரண்டு பொருட்களை வைத்து சுவையான எல்லாரும் சாப்பிட்ட மாதிரி அதே சுவையில் எப்படி செய்து சாப்பிட்டு நம் குழந்தைகளுக்கு அதை கொடுத்து அவங்களையும் 90ஸ் காலத்துல நம்ம எப்படி மிட்டாய்கள் சாப்பிடுவோம் அப்படிங்கறத தெரிஞ்சுக்க வைக்க போறோம்.

-விளம்பரம்-

90களில் காலகட்டத்தில் கிடைத்த அனைத்து பெட்டிகளையும் மிட்டாய்கள் சுவையாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும். இப்போது அந்த மாதிரி மிட்டாய்களை தேடி கண்டுபிடித்து வாங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எப்படியும் சில மிட்டாய்கள் நமக்கு கிடைக்கிறது இல்லை. அரிய பொக்கிஷமான இந்த 90களின் பெட்டிக்கடை மிட்டாய்ளை முக்கியமான இந்த கமர்கட்டு மிட்டாய எப்படி செஞ்சு சாப்பிடலாம் அப்படிங்கிறத பார்க்கலாம்.

- Advertisement -

சுவையான கமர்கட்டு மிட்டாய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் என்ன பல் இல்லாத தாத்தா பாட்டிகளுக்கு தான் இந்த கமர்கட்டுமிட்டாய் கடிக்க முடியாமல் சப்பு கொட்டி சாப்பிடற மாதிரி இருக்கும் . சரி வாங்க இந்த சுவையான காக்கா கடி கடிக்க முடியாத கார்ரூபாய் கமர் கட்டு மிட்டாய் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.

Print
4.34 from 3 votes

கமர்கட்டு மிட்டாய் | Kamarkattu Mittai Recipe In Tamil

90ஸ் கிட்சுகளின் மனசுக்கு மிகவும் பிடித்த பள்ளிகூட பெட்டி கடை கமர்கட்டு மிட்டாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம். கமர்கட்டு  மிட்டாயகாக்கா கடி கடிக்க முடியாம கஷ்டப்பட்டு அந்த பல்லுக்கு தெரியும் அதனுடைய சுவை எப்படி இருக்கும் அப்படின்னு. இந்த கமர்கட்டு மிட்டாய் செய்வதற்கு இரண்டு பொருட்கள் தான் தேவை. இந்த இரண்டு பொருட்களை வைத்து சுவையான எல்லாரும் சாப்பிட்ட மாதிரி அதே சுவையில் எப்படி செய்து சாப்பிட்டு நம் குழந்தைகளுக்கு அதை கொடுத்து அவங்களையும் 90ஸ் காலத்துல நம்மஎப்படி மிட்டாய்கள் சாப்பிடுவோம் அப்படிங்கறத தெரிஞ்சுக்க வைக்க போறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Kamarkattu Mittai
Yield: 4
Calories: 19kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வெல்லம்
  • 12 கப் பொடியாக துருவிய தேங்காய்
  • 12 கப் தண்ணீர்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அதில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வெல்லம் கொதித்தவுடன் ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை வடிகட்டவும்.
  •  
    காரணம் வெல்லத்தில் இருக்கும் தூசிகளை நீக்குவதற்கு. பின் அடுப்பில் அந்த அடி கனமான பாத்திரத்தை வைத்து நன்றாக வெல்ல கரைசலை கிளறிவிடவும். வெல்லம் கெட்டியாக ஆரம்பித்த உடனே ஒரு கிண்ணத்தில் நீரை எடுத்து கொள்ள வேண்டும்.
  • பின் கெட்டியாக இருக்கும் வெல்லத்தில் இருந்து ஒரு சொட்டு எடுத்து கிண்ணத்தில் உள்ள நீரில் விட வேண்டும். பின் வெல்லத்தின் மேல் விரலை வைத்து தேய்த்தால் வெல்லம் கரையும் அப்படி கரைந்தால் இன்னும் சிறிது நேரம் வைத்து வெல்லத்தை கிளற வேண்டும்.
  • நன்றாக வெல்லம் பாகுபதம் வரும்வரை கிளற வேண்டும். இப்போது நீரில் வெல்லத்தை ஒரு சொட்டு விட்டு தேய்த்து பார்த்தால்  கரையாமல்கெட்டியாக இருக்கும்.
  • இந்த பதம் வந்த உடன் அடுப்பை ஸ்லோ ஃப்லேமில் வைத்து விட்டு தேங்காய் துருவலை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அல்வா பதம் வரும்வரை கை விடாமல் கிளறிவிட வேண்டும்.அல்வா பதம் வந்த உடன் அடுப்பை நிறுத்தி விட்டு  வேறு  பாத்திரத்திற்குமாற்ற வேண்டும்.
  • கை பொருக்கும் அளவிற்கு சூடு வந்த உடன் கைகளில் சிறிது நெய் தடவி குட்டி குட்டி உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.இதோ 90ஸ் கிட்ஸின் பிடித்தமானகாக்காகடி கடிக்க முடியாத கார்ரூபாய்(25பைசா) கமர்கட்டு மிட்டாய் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 19kcal | Carbohydrates: 3.7g | Protein: 0.7g | Fat: 0.2g | Potassium: 250mg | Fiber: 1.1g | Sugar: 2.6g | Vitamin C: 2.4mg