Home ஸ்வீட்ஸ் குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் செய்து கொடுக்க முயற்சியுங்கள். அப்படி ஆரம்பிப்பவர்களா நீங்கள் உங்கள் முயற்சிளை இதமான இனிப்புடன் தொடங்கலாம். ரசகுல்லா விரும்பிகளுக்கு அதன் பேரைக் கேட்டாலே நாவின் மொட்டுகள் தாளம் போட ஆரம்பித்துவிடும்.

-விளம்பரம்-

சிலர் வாரத்தில் ஒருமுறையேனும் வாங்கி சாப்பிட்டுவிடுவார்கள். அப்படி என்னதான் அந்த ரசகுல்லாவில் இருக்கு என்று கேட்டால் அதெல்லாம் ஃபீல் பண்ணி சாப்பிட்டு பார்த்தால்தான் தெரியும் என்பார்கள். அப்படி மெய் மறந்து ரசகுல்லாவை சுவைக்கும் விரும்பிகளுக்காகவே இந்த ரெசிபி.நாம் பொதுவாக வீட்டில் ரவா லட்டு, கேசரி, ரவை அப்பம், குளோப் ஜாமூன் போன்ற இனிப்புகளை தான் அதிகம் செய்திருப்போம்.

இதனை தவிர வேற இனிப்புகள் எனில் வெளியில் உள்ள கடைகளில் தான் வாங்குவோம். ரசகுல்லா, ரசமலாய் போன்ற இனிப்பு வகைகளை கடைகளில் இருந்து தான் வாங்கி சுவைப்போம். அனைத்து வயதினருக்கும் பிடித்த ஸ்வீட் பட்டியலில் நிச்சயம் ரசகுல்லாவும் ஒன்றாக இருக்கும். குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடுவது ரசகுல்லா தான். இந்த ரசகுல்லா செய்வதற்கு பலருக்கும் தெரியாது. அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசகுல்லாவை வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Print
5 from 1 vote

பெங்கால் ரசகுல்லா | Bengal Rasagulla Recipe In Tamil

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்துகொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் செய்து கொடுக்க முயற்சியுங்கள். அப்படி ஆரம்பிப்பவர்களா நீங்கள் உங்கள் முயற்சிளை இதமான இனிப்புடன் தொடங்கலாம். ரசகுல்லா விரும்பிகளுக்கு அதன் பேரைக் கேட்டாலே நாவின் மொட்டுகள் தாளம் போட ஆரம்பித்துவிடும். சிலர் வாரத்தில் ஒருமுறையேனும் வாங்கி சாப்பிட்டுவிடுவார்கள். அப்படி என்னதான் அந்த ரசகுல்லாவில் இருக்கு என்று கேட்டால் அதெல்லாம் ஃபீல் பண்ணி சாப்பிட்டு பார்த்தால்தான் தெரியும் என்பார்கள். அப்படி மெய் மறந்து ரசகுல்லாவை சுவைக்கும் விரும்பிகளுக்காகவே இந்த ரெசிபி.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Bengal Rasagulla
Yield: 3 People
Calories: 122kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 பால் பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 லி பால்
  • 1 டேபிள் ஸ்பூன் வினிகர்
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 1 கப் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் குங்குமப் பூ

செய்முறை

  • முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பால் கொதித்ததும் அத்துடன் வினிகர் சேர்த்து கலந்து விடவும்.
  • பின் பால் திரிய ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் இதனை எடுத்து ஒரு துணியில் ஊற்றி அரை மணி நேரம் தொங்க விடவும்.
  • பின் இதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதனுடன் மைதா மாவு, மஞ்சள் கலர் ஜெல் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள், குங்குமப் பூ சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின் அதில் நாம் உருட்டி வைத்துள்ள ரசகுல்லா உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும். உருண்டைகள் பெரிய வடிவில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • இந்த ரசகுல்லாவை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து அதன் மேல் குங்குமப்பூ வைத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பெங்கால் ரசகுல்லா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 122kcal | Carbohydrates: 12g | Protein: 8g | Fat: 4.6g | Saturated Fat: 1.8g | Sodium: 77mg | Potassium: 128mg | Sugar: 5g | Vitamin A: 59IU | Vitamin C: 149mg | Calcium: 27mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : பிரெட் வைத்து குண்டு குண்டாக சாப்டான பிரெட் குலாப் ஜாமுன் எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!