பிரெட் வைத்து குண்டு குண்டாக சாப்டான பிரெட் குலாப் ஜாமுன் எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

- Advertisement -

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் பிடித்த ஒரு இனிப்பு பலகாரம் என்றால் அது குலோப் ஜாமுன் தான். இப்பொழுதெல்லாம் குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம் வரையில் குலோப் ஜாமுனில் நிறைய ரெசிபிஸ் வந்துள்ளது. முதலில் எல்லாம் கடைகளில் மட்டுமே குலோப் ஜாமுன் கிடைக்கும் கடைகளில் இருந்து மட்டுமே நம்மால் குலோப் ஜாமுன் வாங்கி சாப்பிட முடியும்.

-விளம்பரம்-

ஆனால் இப்பொழுது நாம் வீடுகளிலேயே சுவையாக குலோப் ஜாமுன் செய்ய ரெடிமேட் குலோப் ஜாமுன் நமக்கு கிடைக்கிறது அதுவும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று நமக்கு குலோப் ஜாமுன் மிக்ஸ் கடைகளிலேயே கிடைக்கும். சுவையான குண்டு குண்டு குலாப் ஜாமுன்களை நாம் வீட்டிலேயே சாப்பிட்டு ருசிக்கலாம்.

- Advertisement -

ஆனால் கடைகளில் மிக்ஸ் வாங்கி வீட்டில் குலோப் ஜாமுன் செய்ய முடியாதவர்களுக்கு பிரட் வைத்த செய்யக்கூடிய குலோப் ஜாமுன்களை நாம் இப்பொழுது செய்து காட்டப் போகிறோம். பிரட் வைத்து செய்யப்போகிறோம் இந்த குலோப்ஜாமுன்களும் மிகவும் சுவையாக இருக்கும்.10 பிரட் துண்டுகள் இருந்தால் போதும் சுவையாக வீட்டிலேயே குலோப் ஜாமுன் செய்து சாப்பிடலாம். குறைவான செலவில் சூப்பரான குலோப் ஜாமுன் செய்வதற்கு மிகவும் குறைவான நேரம் மட்டுமே நமக்கு தேவைப்படும். வாங்க இந்த சுவையான பிரட் குலோப் ஜாமுன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பிரெட் ஜாமூன் | Bread Jamun Recipe In Tamil

கடைகளில் மிக்ஸ் வாங்கி வீட்டில் குலோப் ஜாமுன் செய்ய முடியாதவர்களுக்கு பிரட் வைத்த செய்யக்கூடிய குலோப் ஜாமுன்களை நாம் இப்பொழுது செய்து காட்டப் போகிறோம். பிரட் வைத்து செய்யப்போகிறோம் இந்த குலோப்ஜாமுன்களும் மிகவும் சுவையாக இருக்கும்.10 பிரட் துண்டுகள் இருந்தால் போதும் சுவையாக வீட்டிலேயே குலோப் ஜாமுன் செய்து சாப்பிடலாம். குறைவான செலவில் சூப்பரான குலோப் ஜாமுன் செய்வதற்கு மிகவும் குறைவான நேரம் மட்டுமே நமக்கு தேவைப்படும். வாங்க இந்த சுவையான பிரட் குலோப் ஜாமுன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Bread Jamun
Yield: 4
Calories: 329kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 10 பிரட்
  • 1/2 கப் பால் பவுடர்
  • 1 கப் சர்க்கரை
  • 4 டேபிள் ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க்
  • 2 ஏலக்காய்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பிரட் துண்டுகளின் ஓரத்தை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் அதனை உதிர்த்து போட்டுக் கொள்ளவும்.அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் பால் பவுடர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • பாகுபதம் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை சர்க்கரை நன்கு கொதித்து வந்தாலே போதும்.
  • பிறகு அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து கொதித்த உடன் அடுப்பை அணைத்து விடவும்.
  •  
    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள ரெட் கலவையில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  •  
    அந்த உருண்டைகளை ஆறவைத்து பின்னர் சர்க்கரை பாகு போட்டு மூன்று மணி நேரம் ஊற வைத்தால் சுவையான பிரட் குலோப் ஜாமுன் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 329kcal | Carbohydrates: 16g | Protein: 8g | Sodium: 172mg | Potassium: 299mg

இதையும் படியுங்கள்: பஞ்சு போல சாப்டான, ஜூஸியான ரசகுல்லா இனி இப்படி செய்து பாருங்க! ரெம்ப சுலபமாக செய்துவிடலாம்!