இந்த வெயிலுக்கு நமக்கு சாப்பிடணும் அப்படின்னு கூட தோணாது. நம்ம நினைக்கிறது எல்லாம் எதாவது ஜூஸ் குடிக்கணும் நீராகாரமா ஏதாவது எடுத்துக்கிட்டே இருக்கணும் அப்படி இருந்தா நம்ம நினைப்போம். அந்த வகையில இப்ப நம்ம சூப்பரான ஒரு இந்த வெயிலுக்கு ஏத்த மசாலா மோர் தான் பாக்க போறோம்.
இந்த மசாலா மோர் குடிக்கிறதுக்கு தொண்டைக்கு இதமா சூப்பரா ஜில்லுனு இருக்கும். அது உன் வெயில் நேரத்துல அதே நேரங்களில் இந்த மசாலா மோர் குடிச்சா ரொம்ப டேஸ்டா செம்மையா இருக்கும். இந்த மசாலா மோர்ல நம்ம புதினா கொத்தமல்லி இலைகள் எல்லாமே சேர்த்து செய்வதால் நமக்கு இந்த மோர் குடிக்கிறதால புத்துணர்ச்சி கிடைக்கும். மதிய நேரங்களில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறப்ப இது செஞ்சு எல்லாரும் பேசிக்கிட்டே ஜாலியா குடிக்க சூப்பரா இருக்கும்.
இந்த மசாலா மோர் கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் வெறும் மோர் குடிக்க பிடிக்காதவங்க இந்த மாதிரி புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய சில விஷயங்களை சேர்த்து ரெடி பண்ணி குடிச்சா ரொம்பவே டேஸ்ட்டா சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான சுவையான மசாலா மோர் டேஸ்ட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மசாலா மோர் | Masala Mor Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 கப் தயிர்
- 2 பச்சை மிளகாய்
- 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- 1 கைப்பிடி புதினா இலைகள்
- 1 டீஸ்பூன் சாட் மசாலா
- 1 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1 துண்டு இஞ்சி
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் தயிரை சேர்த்து நன்றாக கடைந்து கொள்ளவும்
- மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து கலந்துவைத்துள்ள தயிரில் சேர்த்துக் கொள்ளவும்.
- அதனுடன் சீரகத்தூள் சாட் மசாலா தேவையான அளவு உப்பு ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறினால் சுவையானமசாலா மோர் தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : சாம்பார் சாதம், ரசம் சாதமுடன் சாப்பிட ருசியான சௌ சௌ தயிர் கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!